தளபதி விஜய் தற்போது வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் 'வாரிசு' படத்தின் பணிகளில் பிசியாக இருந்து வருகிறார்.  'தளபதி 66' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு இருந்த இந்த படத்திற்கு விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு 'வாரிசு' என்று அதிகாரபூர்வமாக தலைப்பு வைக்கப்பட்டது.  இந்த படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து இருக்கிறது.  தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் முதன்முறையாக விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உடன் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு, சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ், குஷ்பு, ஜெயசுதா, சம்யுக்தா, சங்கீதா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | தனது முதல் தெலுங்கு படத்தில் ஒப்பந்தம் ஆனா சூர்யா!


இப்படம் குறித்து அடிக்கடி ஒவ்வொரு தகவலாக வெளியாகி கொண்டிருக்கும் சமயத்தில் தற்போது ஒரு லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.  அதாவது வாரிசு படத்தில் இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இவரது காட்சிகள் தற்போதைய ஷெட்யூலில் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.  ஏற்கனவே இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க தெலுங்கு பிரபலம் ஒருவரை படக்குழு அணுகியதாகவும், ஆனால் தேதி சிக்கல்கள் காரணமாக அவரால் இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுக்கமுடியாமல் போனது.  இதனையடுத்து இந்த கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யாவை நடிக்கவைக்க படக்குழு அணுகியுள்ளது.



விஜய்யுடன், எஸ்,ஜே.சூர்யா இணைந்து நடிப்பது இது முதல்முறையல்ல, நான்காவது முறையாக இப்படத்தின் மூலம் அவர் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற போகிறார்.  விஜய்யை வைத்து எஸ்.ஜே.சூர்யா முதன்முதலாக இயக்கிய 'குஷி' படம் நல்ல வரவேற்பை பெற்றது, அதனை தொடர்ந்து அவர் விஜய் நடித்த 'நண்பன்' மற்றும் 'மெர்சல்' போன்ற படங்களில் நடித்திருந்தார்.  'வாரிசு' படத்தில் விஜய்யுடன், எஸ்.ஜே.சூர்யா இணையயப்போவதாக வெளிவந்த செய்தி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் படம் குறித்த பல்வேறு அப்டேட்டுகளை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  மேலும் நடிகர் எஸ் ஜே சூர்யா இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.  ரசிகர்கள் இணையத்தில் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


மேலும் படிக்க | தளபதிக்கு அடுத்து சியான் - தமிழில் எகிறும் ராஷ்மிகா கிராஃப்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ