Sonia Agarwal With Selvaraghavan: கோலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநராக விளங்குபவர், செல்வராகவன். இவரது முன்னாள் மனைவி சோனியா அகர்வாலை வைத்து ஏற்கனவே இரண்டு படங்களை இயக்கியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சோனியா அகர்வால்-செல்வராகவன் திரைப்படங்கள்..


தமிழ் திரையுலகில் தனினத்துவ இயக்குநர்களின் பட்டியலில் முக்கிய இடத்தை பெற்றிருப்பவர், செல்வராகவன். இவர் படங்களுக்கும், இவருக்கும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகை சோனியா அகர்வால், செல்வராகவன் இயக்கியிருந்த 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த இரு படங்களுமே நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் இடையே வரவேற்பையும் பெற்றது. படங்களில் ஒன்றாக நடித்து பணியாற்றிய இவர்கள், பின்னர் காதலில் விழுந்தனர். 


காதல் திருமணம்..விவாகரத்து..


சோனியா அகர்வாலும், செல்வராகவனும் கடந்த 2006ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். சோனியா அகர்வால் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார். திருமணம் ஆன 4 ஆண்டுகளுக்கு பிறகு செல்வராகவனும் சோனியா அகர்வாலும் 2010ஆம் ஆண்டு விவாகர்து பெற்றனர். இருவரும் ஒத்துப்போகமில்லை என்ற காரணத்தால் இருவரும் விவாகரத்து பெற்றனர். செல்வராகவன், 2011ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். 


செல்வராகவனுடன் பணியாற்றும் சோனியா அகர்வால்..


தனுஷ், சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்டோர் நடித்திருந்த படம், புதுப்பேட்டை. இந்த படம், 2006ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. ரசிகர்கள் பலர், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து பல ஆண்டுகளாக காத்துக்கொண்டுள்ளனர். இது குறித்து செல்வராகவனிடமும் இது குறித்து அப்டேட் கேட்டு வருகின்றன. இந்த படத்திற்கான பணிகளில் செல்வராகவன் விரைவில் இறங்குவார் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | அனிருத் ஹீரோவாக நடிக்க இருந்த சூப்பர் ஹிட் படம்! எது தெரியுமா?


சோனியா அகர்வால், இதில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துள்ளார். புதுப்பேட்டை 2 படம் எடுத்தால் நடிப்பீர்களா என அவரிடம் ஒரு நேர்காணலில் கேட்கப்பட்டது. அதற்கு அவர், நடிப்பது தனது வேலை என்றும், புதுப்பேட்டை 2 படத்தில் நடிக்க அழைத்தால் தனக்கு மகிழ்ச்சிதான் என்றும் தெரிவித்திருக்கிறார். 


படம் வருமா? 


செல்வராகவன் இயக்கிய 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்பட்டது. முதல் பாகத்தில் நடித்தவர்களே இந்த பாகத்திலும் நடிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே போல, புதுப்பேட்டை 2 படத்தையும் பார்ப்பதற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். ஆனால், இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்படாது என்று பேசப்படுகிறது. 


மேலும் படிக்க | Bhagyaraj: நதி மரணங்கள்..சைதை துரைசாமி மகன் உயிரிழப்பு-பாக்கியராஜ் பகிர்ந்த பகீர் உண்மை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ