அனிருத் ஹீரோவாக நடிக்க இருந்த சூப்பர் ஹிட் படம்! எது தெரியுமா?

Anirudh Ravichander: இசையமைப்பாளர் அனிருத்தை வைத்து, சூப்பர் ஹிட் படம் ஒன்று இயக்கப்பட இருந்தது. ஆனால் அது கைமாறி வேறு ஒரு ஹீரோவிற்கு சென்றுவிட்டது. அது என்ன படம் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Feb 13, 2024, 02:03 PM IST
  • அனிருத் நடிக்க இருந்த சூப்பர் ஹிட் படம்
  • ஹீரோவாக வேறு ஒருவர் நடித்தார்
  • அது என்ன படம் தெரியுமா?
அனிருத் ஹீரோவாக நடிக்க இருந்த சூப்பர் ஹிட் படம்! எது தெரியுமா?  title=

Anirudh Ravichander In Dada Movie: கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த நல்ல படங்களுள் ஒன்று ‘டாடா’. இந்த படத்தை கணேஷ் கே.பாபு இயக்கியிருந்தார். இப்படத்தில் கவின் ஹீராேவாக நடித்திருந்தார். படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இப்படம் வெளியாகி 1 ஆண்டு நிறைவடைந்ததை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

டாடா திரைப்படம்:

தமிழ் திரையுலகில், தற்போது நல்ல கதையம்சத்துடன் வரும் குறைவான பட்ஜெட் திரைப்படங்களும் பெரிய ஹிட் அடித்து வருகின்றன. அந்த வகையில், கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்ற படம், டாடா. இந்த படத்தை புதுமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கியிருந்தார். கவின் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்திருந்தார். யுவன் சங்கர் ராஜா பாடியிருந்த ‘போகாதே’ பாடல் இளசுகள் மத்தியில் பெரிய ஹிட் அடித்தது. 

அனிருத்தை வைத்து கதை எழுதிய இயக்குநர்..

டாடா படத்தின் இயக்குநர், கணேஷ் கே.பாபு ஒரு நேர்காணில் கலந்து காெண்ட போது அப்படம் குறித்து சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, தான் டாடா படத்தின் கதையை எழுதிய போது இசையமைப்பாளர் அனிருத்தை மனதில் வைத்துதான் எழுதியதாக கூறியிருந்தார். அனிருத்தை இப்படத்தில் நடிக்க வைத்திருந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்து இந்த கதையை வடிவமைத்ததாகவும் கூறியிருந்தார். 

மேலும் படிக்க | ஹாலிவுட் பட விருதுகளில் இடம் பெற்றுள்ள அட்லீயின் ஜவான்!

அனிருத் நடித்துள்ள படங்கள்..

அனிருத், தான் சினிமாவிற்கு வந்த புதிதில் இருந்து இசையமைக்கும் பணியையும் பாடல் பாடும் பணியை மட்டுமே செய்து வருகிறார். மாரி படத்திலும் எதிர்நீச்சல் படங்களில் மட்டும் தனது பாடல்களில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இது தவிர, பாடல் பணியின் போது எடுக்கப்படும் பிடிஎஸ் வீடியோக்களில் இடம் பெற்றிருப்பார். 

Dada

முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர்..

டாடா படத்தில், புதுமுகங்களை வைத்து இயக்க திட்டமிட்டிருந்தாராம், அப்படத்தின் இயக்குநர் கணேஷ் கே.பாபு. ஆனால், படத்தின் தயாரிப்பாளர் இந்த ஐடியாவிற்கு நோ சொன்னதாகவும், புது முகங்களை வைத்து எடுத்தால் படம் சக்சஸ் ஆகாது என்ற காரணத்தால் தெரிந்த முகங்களை வைத்து படம் இயக்க கூறியதாகவும் சொல்லப்படுகிறது. 

பிக்பாஸ் 7 நிகழ்ச்சி சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் முக்கிய போட்டியாளராக இருந்த பிரதீப் ஆண்டனி, ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்த போது டாடா படத்தில் தான் ஹீரோவாக நடிக்க இருந்ததாகவும், கவினிற்காக விட்டுக்கொடுத்து விட்டதாகவும் கூறியிருந்தார். டாடா படத்தில் இவர் கவினுடன் வேலை பார்ப்பவராக நடித்திருந்தார். இவர, தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவருக்கு பல வருடங்களாக நண்பராக உள்ளார். 

மேலும் படிக்க | Lal Salaam Vs Lover: லால் சலாம் படத்திற்கு ஈடு கொடுக்கும் லவ்வர்! பாக்ஸ் ஆபிஸ் கலக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News