Bhagyaraj: நதி மரணங்கள்..சைதை துரைசாமி மகன் உயிரிழப்பு-பாக்கியராஜ் பகிர்ந்த பகீர் உண்மை!

Bhagyaraj Shares Video About River Deaths: சைதை துரைசாமியின் மகனின் உடல், சட்லுஜ் நதிக்கரையில் 9 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு கிடைத்துள்ள நிலையில், நடிகர் பாக்கியராஜ் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Written by - Yuvashree | Last Updated : Feb 13, 2024, 07:16 PM IST
  • நதி மரணங்கள் குறித்து பேசிய பாக்கியராஜ்
  • சைதை துரைசாமி மகன் இறப்பில் சந்தேகம்?
  • உண்மை என்ன?
Bhagyaraj: நதி மரணங்கள்..சைதை துரைசாமி மகன் உயிரிழப்பு-பாக்கியராஜ் பகிர்ந்த பகீர் உண்மை! title=

Actor Bhagyaraj Shares Video About River Deaths Linked To Vetri Duraisamy Death: வெற்றியின் உடல் 9 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு நேற்று கிடைத்தது. 

வெற்றி துரைசாமி உயிரிழப்பு..

முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன், வெற்றி துரைசாமி சென்று கொண்டிருந்த கார், கடந்த 4ஆம் தேதி விபத்தில் சிக்கியது. இதில், காரின் ஓட்டுநரின் உடல் கிடைத்தது, வெற்றியின் நண்பர் உயிருடன் மீட்கப்பட்டார். இந்த நிலையில், வெற்றியின் உடல் 9 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு நேற்று கிடைத்தது. கார் ஓட்டிக்கொண்டிருந்தவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து அவரது கட்டுப்பாட்டில் கார் இல்லாததால் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் பலியானவ வெற்றி துரை சாமிக்கு பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். 

பாக்கியராஜ் பகிர்ந்த பகீர் பதிவு..

நடிகர் பாக்கியராஜ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்ற தலைப்பில் சில உண்மைகளை வீடியோக்களாக பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், நேற்றும் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அதில், நதியில் ஏற்படும் மரணங்கள் குறித்து பேசியிருந்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியுள்ள விஷயங்கள் பகீர் கிளப்பும் வகையில் உள்ளது. அவர் அப்படி என்ன பேசினார் தெரியுமா?

நதி மரணங்கள் குறித்து பேசிய பாக்கியராஜ்..

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அம்பாரம்பாளையம் எனும் ஆற்றுக்கரையில் நடிகர் பாக்கியராஜ் அடிக்கடி படப்பிடிபுக்கு செல்வாராம். அங்கு குடும்பத்துடன், நண்பர்களுடன் சுற்றுலாவிற்காக பலர் வந்து செல்வதுண்டு. அப்படி வருபவர்கள் ஆற்றங்கரையில் குளிப்பதும் உண்டு. நதியில் இறங்கி குளிப்பவர்கள் அப்படியே காணாமல் போய் விடுவார்களாம். அப்படி ஒருமுறை இவர் இருக்கும் நேரத்திலும் நிகழ்ந்துள்ளது. நதியில் ஏற்படும் சுழலில் சிக்கி அவர்கள் இறந்திருக்கலாம் என அருகில் இருந்தவர்கள் கூறியதால், எப்படியாவது உடலை மீட்டு தர கூறி உறவினர்கள் கேட்கும் போது அதற்கு ஏற்றவாறு பேரம் பேசி ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கி விடுவார்களாம். அதன் பிறகு உடலை மீட்டுத்தருவார்களாம். 

மேலும் படிக்க | Lal Salaam Vs Lover: லால் சலாம் படத்திற்கு ஈடு கொடுக்கும் லவ்வர்! பாக்ஸ் ஆபிஸ் கலக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

இப்படியே தொடர்ந்து நடைபெறவும், சில நாட்களுக்கு பின்னர்தான் இது குறித்த உண்மை வெளிவந்துள்ளது. பணம் வாங்கிக்கொண்டு பிணத்தை கொண்டுவந்து கொடுக்கும் நபர்தான் நீரில் மூழ்கி இருந்து, நதியில் குளிப்பவர்களை நீருக்குள் இழுத்து சாகடித்து பின்பு பாறையில் கொண்டு போய் தலையை முட்டி விடுவாராம். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற கேவலமான செயல்களிலும் ஈடுபடுபவர்கள் இருப்பதாக கூறியிருக்கிறார் பாக்கியராஜ். 

 

வெற்றி துரைசாமிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? 

வெற்றி துரைசாமியின் கார் விபத்துக்குள்ளான 9 நாட்கள் கழித்துதான் அவரது பிணம் கைக்கு கிடைத்தது. ஆனால், அவருடன் காருக்குள் இருந்த இருவரில் ஒருவரின் உடலும், ஒருவர் உயிருடனும் உடனே கிடைத்து விட்டனர். வெற்றி துரைசாமி காணாமல் போயிருந்த சமயத்தில், அவர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1கோடி சன்மானம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 9 நாட்கள் கழித்து அவரது சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதை ஒட்டி, இவரது மரணத்திலும் சந்தேகம் எழுந்துள்ளது.  சரியாக இந்த சமயத்தில் பாக்கியராஜ்ஜும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளதால் தற்போது இது வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | அனிருத் ஹீரோவாக நடிக்க இருந்த சூப்பர் ஹிட் படம்! எது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News