நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் பீஸ்ட் படம் நாளை வெளியாக இருக்கிறது. படம் வெளியாவதை திருவிழா போல் கொண்டாட விஜய் ரசிகர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர். மழை, வெயில் என எதையும் பார்க்காமல் கட் அவுட் வைப்பது, போஸ்டர் அடிப்பது என மும்முரமாக இறங்கியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படத்துக்கான டிக்கெட் விற்பனை தொடங்கி ஏறத்தாழ அனைத்து திரையரங்குகளிலும் விற்று தீர்ந்துவிட்டன.இதற்கிடையே பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.



வீரராகவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய்யின் நடிப்பை ட்ரெய்லரில் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கின்றனர். மேலும், ட்ரெய்லரில் காவி வண்ண துணியை கிழிப்பதுபோல் இடம்பெற்றிருந்த காட்சியை கண்ட ரசிகர்கள் காவி வண்ணத்தை விஜய் கிழிக்கிறார் என கூறினர். அதுமட்டுமின்றி பிரதமர் மோடியின் புகைப்படத்தை அதில் பொருத்தியும் சில பதிவுகளை வெளியிட்டனர்.


மேலும் படிக்க | தமிழ்நாடு அரசுக்கு விஜய் சொன்ன அட்வைஸ்


இதனையடுத்து அது காவி வண்ணம் இல்லை. ஆரஞ்சு நிறம்தான். அந்தக் காட்சியில் எந்த உள்நோக்கமும் இல்லை என இயக்குநர் நெல்சன் திலீப்குமார் விளக்கம் அளித்திருந்தார்.



இந்நிலையில் பீஸ்ட் படத்தின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. Sounds from the world of Beast என்ற தலைப்போடு வெளியாகியிருக்கும் இந்தப் ப்ரோமோவில் வசனங்கள் எதுவும் இடம்பெறவில்லை. 


மேலும் படிக்க | மகன் கேட்ட ஒரே கேள்வி... ஆடிப்போன விஜய்..! அப்படி என்ன கேட்டார்?


மாறாக, பீஸ்ட் படத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தங்களை கொண்டு இந்த ப்ரோமோ உருவாகி இருக்கிறது. புதுமையான பாணியில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த புரோமோவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்துவருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR