தமிழ் சினிமாவிற்கு இனி வரவிருக்கும் ஆண்டும்  இந்த ஆண்டின் அடுத்த பாதியும் தஙக வேட்டைதான். காரணம், பல மாஸ் ஹீரோக்களின் படங்கள் இந்த மாதத்தின் இறுதியில் இருந்து வெளியாகவுள்ளன. இவை பெரிய ஹீரோக்களின் படங்கள் என்பதை தாண்டி, பல திரையுலகை சேர்ந்த ‘சூப்பர் ஸ்டார்’ நடிகர்கள், தமிழ் படங்களில் கேமியோ ரோலில் வர இருக்கின்றனர். அதே போல பல தமிழ் நடிகர்கள் வெவ்வேறு மொழி படங்களில் கௌரவ தோற்றத்தில் வர இருக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயிலர்-மோகன்லால் மற்றும் சிவராஜ் குமார்:


ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் ‘ஜெயிலர்’ படம், இப்போதே ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்ப்பர்ப்புகளை தூண்டி விட்டது. மலையாள சூப்பர் ஸ்டார்களூள் ஒருவரான மோகன்லாலும் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ் குமாரும் ரஜினியுடன் இணைந்து நடிப்பதே இந்த பெரும் எதிர்பார்ப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் தமன்னா முக்கிய கதாப்பாத்திரத்தில் வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று திரையுலக சூப்பர் ஸ்டார்களையும் திரையில் பார்க்க ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர். 


மேலும் படிக்க | பிரபலமான படங்களில் நடிக்க இருந்து வாய்ப்பை தவற விட்ட நடிகைகள்..!


சூர்யா-சூரரைப்போற்று இந்தி ரீ-மேக்:


கடந்த வருடம் வெளியான ‘விக்ரம்’ படத்தில் வெறும் 7நிமிடங்களுக்கு மட்டுமே தோன்றினாலும் தான் வந்த காட்சியில் திரையரங்கையே அதிர விட்டவர், சூர்யா. ரோலெக்ஸாக அந்த படத்தில் தலைக்காட்டிய இவர், அடுத்து சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீ-மேக்கில் கௌரவ தோற்றத்தில் வர இருக்கிறார். அக்‌ஷ்ய குமார் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், விரைவில் திரைக்கு வர உள்ளது. 


ஜவான்-விஜய் சேதுபதி:


துணை கதாப்பாத்திரங்களில் நடித்து, இன்று பாலிவுட் வரை சென்று வெற்றி பெற்றுக்கொண்டிருப்பவர், விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமன்றி வில்லன் கதாப்பாத்திரங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டு பெற்று வருகிறார். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ள ‘ஜவான்’படத்தில் சில நிமிட காட்சிகளில் வில்லனாக வர இருக்கிறார். சமீபத்தில் வெளியான மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கிலும் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஜவான் படத்தில் விஜய்?


ஜவான் படத்தில் நடிகர் விஜய் கௌரவ தோற்றத்தில் வருவதாக கூறப்பட்டது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகாததால் இது வெறும் தகவலாக மட்டுமே உள்ளது. இருப்பினும் இயக்குநர் அட்லீ, விஜய்யின் நல்ல நண்பர் என்பதால் அவருக்காக விஜய் இதை செய்யலாம் என ரசிகர்கள் யூகித்துள்ளனர். படம் வெளிவந்த பிறகே இது உண்மையா இல்லையா என்பது தெரியும். இதுவரை விஜய் கேமியோ கதாப்பாத்திரங்களில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


ரஜினிகாந்த்-லால் சலாம்:


ஜெயிலர் படத்தில் பிசியாக நடித்துக்கொண்டிருந்த வேலையிலும், இன்னொரு படத்திற்காக நேரம் ஒதுக்கினார் ரஜினி. பிரபல இயக்குநரும் ரஜினியின் மகளூமான ஐஸ்வர்யா, ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினி ‘மொய்தீன் பாய்’ என்ற  கதாப்பாத்திரத்தில் வருகிறார். இவருடைய கதாப்பாத்திரத்திற்கான படப்பிடிப்பு, சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. 


கமல்-சிம்புவின் 48ஆவது படம்:


சிம்பு நடிக்கும் 48ஆவது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை, கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில், நடிகர் கமல் காமியோ கதாப்பாத்திரத்தில் வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தினை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி டைரக்டு செய்கிறார். இதற்கான படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. 


மேலும் படிக்க | ரஜினி டூ தனுஷ்..படத்திற்காக ‘மொட்டைதலை' லுக்கிற்கு மாறிய நடிகர்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ