வழக்கமாக தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் ஒரு நடிகை தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சில காரணங்களால் அவர்கள் அந்த படத்தில் இருந்து விலகுவதுண்டு. அப்படி பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை ஒரு நடிகை இழந்தார். அது யார் தெரியுமா..?
பொன்னியின் செல்வன்-குந்தவை:
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் மிக முக்கிய கதாப்பாத்திரமாக வருவது, குந்தவை. இதில், நடிகை த்ரிஷா அசராமல் நடித்து அப்ளாஸ் அள்ளினார். ஆனால், இதில் முதலில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா? ‘நடிகையர் திலகம்’ பட நாயகி கீர்த்தி சுரேஷ்தான். இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலகள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் அவர்தான் அந்த படத்தில் நடிக்க இருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த கதை, பொன்னியின் செல்வன் பட சமயத்தில் கீர்த்தி, ரஜினிகாந்துடன் ‘அண்ணாத்த’ படத்திற்கு கால்ஷீட் கொடுத்துவிட்டதால் அவரால் குந்தவை கதாப்பாத்திரத்தில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.
கீர்த்தி மட்டுமன்றி இன்னும் சில நடிகைகள் கூட ஒரு சில இயக்குநர்களின் முதல் தேர்வாக இருந்து பின்னர் வேறு ஒரு நாயகிகளால் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களையும் இங்கே பார்க்கலாம்.
பையா-நயன்தாரா:
ஒரு கார், பெங்களுரு-மும்பை பயணம். விரட்டி வரும் தாதாக்கள், துரத்தி வரும் வில்லன்கள், அனைவரையும் சமாளித்து நாயகியை அவளது வீட்டில் கொண்டு சேர்க்கும் நாயகன், இதுதான் பையா படத்தின் கதை. இதில் கார்த்தி நாயகனாகவும் சாருலதா என்ற கதாப்பாத்திரத்தில் தமன்னா கதையின் நாயகியாகவும் நடித்திருப்பர். இந்த படத்தின் இயக்குநர் லிங்குசாமி தமன்னாவை தேர்வு செய்யும் முன்பாக நயன்தாராவைத்தான் இதில் நடிக்க வைக்க இருந்தாராம், ஆனால் நயன்தாரா இந்த படத்தில் நடிக்க அதிக சம்பளம் கேட்டதால் இதில் அவரை நடிக்க வைக்க முடியாமல் போனது. இதனால் நயன், ஆதவன் படத்திற்கு கால்ஷீட் கொடுத்து அதில் நடிக்க தொடங்கிவிட்டார் என கூறப்படுகிறது.
த்ரிஷா இல்லன்னா நயன்தாரா-த்ரிஷா:
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த படம், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா. இந்த படத்தின் டைட்டிலை போலவே படத்திலும் நயன்தாராவை கண்மனி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பார் விக்னேஷ் சிவன். த்ரிஷாவை கத்தீஜா ரோலில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தினாராம். அது வர்க்-அவுட் ஆகாமல் போக, சமந்தாவை கத்தீஜா கதாப்பாத்திரத்தில் இவர் நடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
மூக்குத்தி அம்மன்-ஸ்ருதி ஹாசன்:
ஆர்.ஜே பாலாஜி இயக்கிய மூக்குத்தி அம்மன் படத்தில், அம்மனாக நடித்திருப்பார் நயன். ஆனால், இந்த வாய்ப்பு முதலில் ஸ்ருதி ஹாசனுக்கு போக இருந்ததாம். ஸ்ருதி, ஆர்.ஜே பாலாஜியின் நல்ல தோழி. அவர், இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தார். ஆனால், நயன்தாரா ஆர்.ஜே பாலாஜியிடம் பர்சனலாக பேசி அந்த வாய்ப்பை தன்வசப்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது.
காற்று வெளியிடை-சாய் பல்லவி:
பிரபல நடிகை சாய்பல்லவி, இயக்குநர் மணிரத்னமின் பெரிய ரசிகை. ‘காற்று வெளியிடை’ படத்தில் லீலா கதாப்பாத்திரத்தில் நடிக்க முதலில் சாய் பல்லவிக்குதான் அழைப்பு விடுக்கப்பட்டது. இதை சாய்பல்லவியே சில நேர்காணல்களில் குறிப்பிட்டுள்ளார். 6 மாசமாக இவரை அப்படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்ததாம். இறுதியில், சாய் பல்லவி இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க மிகவும் இளமையாக இருந்ததால் அவருக்கு பதிலாக அதிதி ராவ் நடித்திருந்தார்.
பிரீத்தி ஜிந்தா-எந்திரன்:
எந்திரன் படத்தின் பணிகள் அனைத்தும் தொடங்குவதற்கு முன்பு, நடிகர் கமல்-பிரீத்தி ஜிந்தா ஆகியோர் இப்படத்திற்காக போட்டோ ஷூட் செய்தனர். இது அனைத்து ஊடகங்களிலும் வைரலாக பரவி பெரிய பேசுபொருளாக மாறியது. ஆனால், இறுதியில் ரஜினி-ஐஸ்வர்யா ராய்தான் எந்திரன் படத்தில் நடித்தனர்.
மேலும் படிக்க | 33 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த பிரபல நடிகர்..! திரையுலகினர் அதிர்ச்சி..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ