நடிகர் சங்கம் சார்பாக தலைவர் நாசர், துணை தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி மற்றும் செயாலாளர் விஷால் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஷால்:


நட்சத்திர கிரிக்கெட் போட்டி தொடர்பாக நிறைய சர்ச்சைகள் எழுந்தது என்று தெரியும் ஆனால் கட்டிடம் கட்ட வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள். சர்ச்சைகளைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. அஜித்திற்கும் எனக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை. அவரை நீண்ட நாட்களாக தெரியும். நாங்கள் அனைவரும் ஒரே குடும்பம். அனைவரையும் சரி சமமாகதான் பார்க்கிறோம். மேலும் சிம்பு விலகுகிறேன் என்று சொன்னது அவருடைய தனிப்பட்ட கருத்து, ஆனாலும் நடிகர் சங்கம் என்பது ஆந்திரா கிளப் அல்லது லீக் கிளப்போ அல்ல அவர் அப்படி பேசியதைத் தவிர்த்திருக்கலாம். ஆனாலும் அவருடைய கருத்தை மதிக்கிறேன். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. ரஜினி சார் நல்லா பண்றீங்க வாழ்த்துக்கள் என்று கூறினார். கமல் சாரும் உங்களுக்கு பக்க பலமா நான் இருக்கிறேன் என்றார். இவர்களை போல விஜய், அஜித் இருவரும் வந்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்போம் என்று விஷால் கூறினர்.


கார்த்தி


கட்டிடம் கட்ட தொடர்பான திட்டங்கள் நிறைய இருக்கு அதை ஒப்புதலுக்காக அனுப்ப இருக்கிறோம். தற்போது இருக்கும் பணம் போதாது எனவே நிதி திரட்டல், படம் நடிக்கும் திட்டம் மற்றும் கலைநிகழ்சி நடத்துதல் போன்ற திட்டங்கள் இருக்கு. அனைவருக்குமே நடிகர் சங்கத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. எனவே பணத்தை தயார் செய்துவிட்டு தான் கட்டிடம் கட்ட ஏற்பாடுகள் செய்யோம். ஒருமுறை கட்டிடம் கட்ட தொடங்கிவிட்டால் முடியும் வரை நிறுத்தக் கூடாது என்ற முடியோடு இருக்கிறோம் என கார்த்திக் தெரிவித்தார்.


பொன்வண்ணன்


நட்சத்திர கிரிக்கெட் போட்டிகானா டிக்கெட் விற்பனையாகவில்லை என்பது உண்மை தான். அஜித்திற்கும் எங்களுக்கும் எந்த பிரச்னை இல்லை. அவர் எந்த நிகழ்ச்சியிலுமே கலந்து கொள்வதில்லை என்பதை கொள்கையாக வைத்திருக்கிறார். ஆகையால் அஜீத் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. எங்களுக்கு எந்த ஒரு மனஸ்தாபமும் கிடையாது. ஆனால் சமுகவலைதளங்கள் தவறாக பரப்பி வருகிறார்கள் என்பது தான் உண்மை. சிம்புடன் மோதல் என்று செய்தி பரவலாக பேசப்படிகிறது இது எதுவும் உண்மை இல்லை. நடிகர் சங்கம் தலையிட வேண்டும் என்று சிம்பு ஒரு கடிதம் கொடுத்தால் இந்த விஷயத்தில் சங்கம் தலையிட முடியும். மற்றபடி நாங்கள் ஒன்னும் செய்ய முடியாது. அனைத்து நடிகர்களுடன் இணைந்து ஒன்றாக பயணிக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். நடிகர் சங்கம் கட்ட இன்னும் பணம் தேவைபடுகிறது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறோம் என்று பொன்வண்ணன் தெரிவித்தார்.


நாசர்


அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டது ஒரு சங்கம் தான் நம்ம தென்னிந்திய நடிகர் சங்கம். ஒரு கட்சிக்கு என்று செயல்படாது. தமிழக அரசின் அரவணைப்பு எங்களுக்கு முக்கியம். எங்களுடைய ஒவ்வொரு செயல் திட்டத்திற்கும் அரசின் ஒப்புதல் வேண்டும். நடிகர் சங்கம் உறுப்பினர்களும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்றும் மேலும் குறிப்பிட கட்சிக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று சொல்ல மாட்டோம். நடிகர் சங்கம் பெயரை மாற்றுவதை பற்றி பேசிக்கொண்டு தான் இருக்கிறோம் அதை பற்றி இன்னும் முடிவெடுக்க என்று நாசர் பேட்டியளித்தார்.