சென்னை: புகழ்பெற்ற பாடகரான எஸ்.பி. பாலசுப்பிரமண்யம் (SP Balasubramaniam) கொரோனா தொற்றால் (Corona Virus) பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் மருத்துவமனையில் அனுமபதிக்கப்பட்ட சில நாட்களில் அவரது உடல்நிலை மோசமானது. தொடர் தீவிர சிகிச்சைகளுக்குப் பிறகு தற்போது அவரது உடல்நிலை முன்னேறி வருகிறது.


எனினும், அவரது தற்போதைய உடல்நிலையைப் பார்க்கும்போது, அவர் இன்னும் சில நாட்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருக்க வேண்டி இருக்கும் என அவர் சிகிச்சைக் பெற்று வரும் MGM மருத்துவமனை (MGM Hospital) அளித்துள்ள செய்திக்குறிப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



அவரது உடற்கூறுகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளன என்றும், அவரது உடல்நிலை நன்றாக முன்னேறி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ள மருத்துவமனை, அவர் இன்னும் சில நாட்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்க வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளது.


முன்னதாக, நேற்று அவரது மகன் எஸ்.பி. சரண் (SP Charan) வெளியிட்ட வீடியோவில் எஸ்.பி.பி-யின் உடல்நிலை நன்றாக முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறினார். மீண்டும் எஸ்.பி.பி.-யின் கோவிட் பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக வந்ததாகவும் சரண் தெரிவித்தார்.


ALSO READ: Watch: எஸ்.பி.பி நன்றாக முன்னேறி வருகிறார், iPad-ல் கிரிக்கெட் பார்க்கிறார்: சரண்


கடந்த மாதம் SPB-யின் COVID 19 சோதனை முடிவுகள் நேர்மறையாக வந்ததையடுத்து, ஆகஸ்ட் 5 ஆம் தேதி, அவர் தனது பேஸ்புக் அகௌண்டில் ஒரு புதுப்பிப்பை வெளியிட்டார். அதில் அவர் அவர் தனது உடல்நிலை பற்றி பேசினார். தான் COVID 19 க்கு நேர்மறையாக சோதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்களின் ஆலோசனைப் படி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.


ALSO READ: மகிழ்ச்சி!! எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் மருத்துவ அறிக்கை