2K கிட் ஸ்பைடர் மேனாக நடித்து பலரையும் கவர்ந்தவர், டாம் ஹாலாண்ட். கடைசியாக வெளியாகியருந்த படங்களில் நகைச்சுவை மற்றும் சாகசம் நிறைந்த காட்சியில் நடித்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியவர் இவர். டாம், தற்போது சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்ற அறிவிப்பினை வெளியிட்டு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்பைடர் மேன் நாயகன்..


மார்வல் படங்கள் மட்டுமன்றி, தான் நடித்த பிற படங்களின் மூலமாகவும் ரசிகர்களின் மனங்களில் நல்ல இடம் பிடித்தவர், டாம் ஹாலாண்ட். அன்சார்டட், டெவில் ஆல் த டைம், தி இம்பாசிபில், செரி பாேன்ற பல படங்களில் நல்ல நடிப்பினை வெளிப்படுத்திய திறமைசாலி இவர். இவருக்கு, ஹாலிவுட் திரையுலகில் மட்டுமன்றி, இந்தியாவிலும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் நீதா அம்பானியின் கலாச்சாரா மையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தனது காதலி ஜெண்டையாவுடன் இந்தியா வந்திருந்தார். இவர், சமீபத்தில் தி க்ரவுடட் ரூம் என்ற தொடரில் நடித்திருந்தார். 


மேலும் படிக்க | பாலியல் தாெழிலாளியாக மாறிய 19 வயது ஹாலிவுட் நடிகை...! யாருடைய மகள் தெரியுமா?


“சினிமாவில் இருந்து ப்ரேக்..”


ஆப்பிள் டிவி தளத்தில் டாம் ஹாலாண்ட் நடித்துள்ள தி க்ரவுடட் ரூம் ஆந்தாலஜி தொடர் வெளியானது. 10 எபிசோடுகளை கொண்ட இந்த தொடரில், ஒரு தொடரை தயாரித்து வழங்கியுள்ளார், டாம் ஹாலாண்ட். இதன் மூலம், நடிகராக இருந்து தயாரிப்பாளராக ப்ரமோட்ட ஆகியுள்ளார். தி க்ரவுடட் ரூம் தொடரில், டாம் ஹாலாண்ட் ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்காக அவர், பல்வேறு கடினமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததாக பேசப்படுகிறது. இந்த நிலையிலில், ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையிலான ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அதில், ஒரே நேரத்தில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பது கடினமான செயலாக இருப்பதாகவும் இதனால் தான் மிகவும் சோர்ந்து போனவனாக உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரை பிசியாக படங்களிலும் தொடர்களிலும் நடித்துவந்த இவர், சுமார் ஓராண்டுக்கு ப்ரேக் எடுத்துக்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 


சைக்கோவாக நடித்த டாம்? 


வெளிநாட்டின் பிரபல சைக்கோ கொலைகாரர்களுள் ஒருவர், பில்லி மில்லிகன். இவர், ஓஹையோ நகரில் பெண்களை கடத்தி, கற்பழித்து, கொலை செய்து அவர்களின் உடமைகளை திருடிச்சென்றதாக கூறப்படுகிறது. போலீஸ் விசாரணையில் இவருக்குள் 24 ஸ்ப்ளிட் பர்சனாலிட்டி டிஸார்டர் (அந்நியன் படம் பாேல) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நபர் குறித்து பல டாக்குமெண்டரிகள் மற்றும் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இந்த கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கதையில்தான் டாம் ஹாலாண்ட் தி க்ரவுடட் ரூம் படத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.


“கொஞ்சம் நிலைமை சரியில்லை..”


பொதுவாகவே, மேற்கூறியது போன்ற கனமான கதாப்பாத்திரங்கை ஏற்று நடிக்கும் நடிகர்கள், அதற்காக ஆன்-ஸ்கீரினில் மட்டுமல்லாது ஆஃப்-ஸ்கிரீனிலும் பல விஷயங்களை செய்ய வேண்டி இருக்கும். அந்த கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடிக்க, அந் கேரக்டராகவே வாழ வேண்டி இருக்கும்.  இதைத்தான் டாம் ஹாலாண்டும் செய்திருக்கிறார். இதனால், அவரது மனநிலையும் உடல்நிலையும் கொஞ்சம் மோசமாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடின உழைப்பு தனக்கு புதிதல்ல எனக்கூறும் டாம், இந்த படம் தன்னை கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே சோதித்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால், மிகவும் சோர்வான நிலைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் குறைந்தது ஒரு வருடத்திற்கு ப்ரேக் எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது தலையை மொட்டையடிக்க போவதாகவும் இந்த கதாப்பாத்திரத்தில் இருந்து கண்டிப்பாக வெளிவர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | விஜய் தேவரகொண்டா மீது பிரபல நடிகை திடுக்கிடும் குற்றச்சாட்டு-அதிர்ச்சியில் ரசிகர்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ