`ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்` படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?
உலக மக்கள் அனைவராலும் ரசிக்கப்ட்ட `ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்` படம் புக்மைஷோவில் மார்ச் 23ம் தேதி ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
'ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்' வணிக ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நன்கு வெற்றிபெற்ற படம். இப்படத்தை பற்றிய செய்திகள் வந்தாலே பலரும் ஆர்வமாய் பார்க்கும் அளவிற்கு பலரும் பைத்தியமாகவே மாறி இருக்கின்றனர். இந்த படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த மார்வெல் கதை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமானதாக இருந்தது. 'ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்' படத்தின் ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்தது. இந்த படத்தை காண பலரும் வெறித்தனமாய் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ததில் சில மணி நேரங்கள் இணையதளங்கள் ஸ்தம்பித்து நின்றது, அந்த அளவுக்கு இப்படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
மேலும் படிக்க | அவெஞ்சர்ஸ் எண்ட் கேமின் சாதனையை முறியடித்த ஸ்பைடர்-மேன்!
ஆன்லைனில் மட்டுமல்லாது ஆஃப்லைனில் டிக்கெட் வாங்க முந்தியடித்துக்கொண்டு கூடிய கூட்டத்தால் பல டிக்கெட் கவுண்டர்களில் கலவரங்கள் நடந்தது. ஸ்பைடர்மேன் வேடத்துடன் ஒரு நபர் டிக்கெட் கவுண்டருக்கு வந்து டிக்கெட் வாங்கிய சம்பவமும் பரபரப்பாக பேசப்பட்டது. ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் திரையரங்குகளில் இந்த படத்தைப் பார்த்து ரசித்த நிலையில், இந்த படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று ரசிகர்கள் பலரும் காத்து கொண்டிருந்தனர்.
கடந்த பிப்ரவரி 11 அன்று, இந்த படத்தை புக்மைஷோ ஸ்ட்ரீம் செய்யப்போவதாக கூறியது, இருப்பினும் சரியான தேதியை அவர்கள் அறிவிக்கவில்லை. புக்மைஷோ ஸ்ட்ரீம் மிகவும் விலையுயர்ந்த ஓடிடி இயங்குதளம் ஆகும். இந்நிலையில் இந்த படம் எப்போது ஓடிடியில் வெளியாகப்போகும் என்கிற அறிவிப்பு தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய செய்திருக்கிறது. வரும் மார்ச் 23 முதல் புக்மைஷோவில் படம் ஸ்ட்ரீம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | டிக்கெட் கவுண்டரில் ஸ்பைடர்மேன்க்கு வந்த சோதனை - வைரல் வீடியோ!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR