அவெஞ்சர்ஸ் எண்ட் கேமின் சாதனையை முறியடித்த ஸ்பைடர்-மேன்!

ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் (Spider-Man: No Way Home) ட்ரெய்லர் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் (Avengers: Endgame) ட்ரெய்லரின் சாதனையை முறியடித்துள்ளது.  24 மணி நேரத்தில் உலக அளவில் அதிக மக்களால் பார்க்கப்பட்ட ட்ரெய்லர் (Trailer) பட்டியலில் முதல் இடத்திற்கு வந்தது ஸ்பைடர்-மேன்.   (Spider-Man: No Way Home) (Avengers: Endgame)

Written by - ZEE Bureau | Last Updated : Aug 26, 2021, 02:58 PM IST
அவெஞ்சர்ஸ் எண்ட் கேமின் சாதனையை முறியடித்த ஸ்பைடர்-மேன்!

ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் (Spider-Man: No Way Home) ட்ரெய்லர் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் ட்ரெய்லரின் சாதனையை முறியடித்துள்ளது.  24 மணி நேரத்தில் உலக அளவில் அதிக மக்களால் பார்க்கப்பட்ட ட்ரெய்லர்  பட்டியலில் முதல் இடத்திற்கு வந்தது ஸ்பைடர்-மேன்.

உலக அளவில் அதிக மக்களால் ரசிக்கப்படும் சூப்பர் ஹீரோக்களில் ஸ்பைடர்மேன் (Spider Man) தான் முதலிடம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.  மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்சின் ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் (Spider-Man: No Way Home) ட்ரெய்லர் யூடியூபில் வெளிவந்து உலகம் முழுவதும் 24 மணி நேரத்தில் 355.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.  இதற்கு முன் அதிக மக்களால் 24 மணி நேரத்தில் பார்க்கப்பட்ட  வீடியோக்களில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் (Avengers: Endgame) ட்ரெய்லர் 289 மில்லியன்களுடன் இருந்தது.   தற்போது ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் டிரைலர் உலக அளவில் அதிகம் பார்க்கப்பட்ட ட்ரெய்லர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு முன் வெளியான ஸ்பைடர் மேன் ஃபார் பிரம் ஹோம் (Spider-Man: Far From Home) டிரெய்லர் 24 மணி நேரத்தில் 135 மில்லியன் மக்களால் பார்க்கப்பட்டது. 

 

சோனி (Sony) நிறுவனம் ஸ்பைடர் மேன் உரிமையை விட்டுக் கொடுக்காமல் இருப்பதற்கான காரணத்தை  தற்போது அனைவரும் அறிந்துள்ளனர்.  இந்த கதாபாத்திரம் சோனி நிறுவனத்திற்கு பல லாபங்களை அள்ளிக் கொடுத்து வருகிறது. 

நோ வே ஹோம் ட்ரைலரில் டாம்  ஹாலண்ட்ஸ் (Tom Holland’s)பீட்டர் பார்க்கர் (Peter Parker) நடித்திருக்கிறார். இப்படத்தில் ஸ்பைடர் மேன் யார் என்று உலகிற்கு தெரிந்த பின் அவர்படும் சிரமங்களை படமாக்கியுள்ளனர்.  இப்படத்தில் டாக்டர் ஸ்டிரேன்ஞ் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.  ஸ்பைடர்மேன் முதல் பாகத்தில் நடித்த டாக்டர் ஆக்டோபஸ் இப்படத்தில் நடிக்கிறார்.   ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYe

More Stories

Trending News