இன்று ஓடிடி-ல் இன்று வெளியாகிவுள்ள படங்கள்!

திரையரங்கில் வெளியான படங்களும், சில படங்கள் நேரடியாகவும் இன்று ஓடிடி-ல் வெளியாக இருக்கின்றன.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 18, 2022, 09:29 AM IST
  • ஹிருதயம் ஹாட்ஸ்டார் ஓடிடி இயங்குதளத்தில் இன்று வெளியாகிறது.
  • விலங்கு 'ஜீ5' ஓடிடி இயங்குதளத்தில் வெளியாகிறது.
இன்று ஓடிடி-ல் இன்று வெளியாகிவுள்ள படங்கள்! title=

வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த மலையாள மொழி திரைப்படம் 'ஹிருதயம்'.  இந்த படத்தை மெர்ரிலேன்ட் சினிமாஸ் மற்றும் பிங் பேங்என்டெர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து இருக்கிறது.  ப்ளாக்பஸ்ட்டர் ஹிட் அடித்த இந்த படத்தில் பிரணவ மோகன்லால், கல்யாணி ப்ரியதர்ஷன், ராஜேந்திரன், அஸ்வத் லால், விஜயராகவன், ஜானி ஆண்டனி, அருண் குரியன், மெகா தாமஸ் போன்ற பலர் நடித்துள்ளனர்.  17 வயது முதல் 30 வயது வரை கதாநாயகனின் வாழ்க்கையில் நடக்கும் தருணங்களை பயணத்தை குறிக்கும் விதமாக இப்படத்தின் கதை அமைந்துள்ளது.  ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்த படம் 'டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்' ஓடிடி இயங்குதளத்தில் இன்று வெளியாகிறது.

Image

மேலும் படிக்க | மார்ச் மாதம் OTT-ல் வெளியாகும் சாணிக்காயிதம்?

அடுத்ததாக 'அமேசான் ப்ரைம் வீடியோ' ஓடிடி இயங்குதளத்தில் இன்று மனோ வி கண்ணதாசன் இயக்கத்தில் வெளியான 'இறுதிப்பக்கம்' வெளியாகிறது.  இந்த படத்தை இன்சோம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்எல்பி நிறுவனம் தயாரித்து இருக்கிறது.  இந்த திரைப்படத்தில் அம்ருதா சீனிவாசன், ராஜேஷ் பாலச்சந்திரன், விக்னேஷ் ஷண்முகம், ஸ்ரீராஜ், கிஷோர் ராஜ்குமார் போன்ற பலர் நடித்துள்ளனர். 

IP

அதனைத்தொடர்ந்து ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான அதிரடி திரைப்படம் 'எனிமி'.  மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் விஷால், ஆர்யா, மிர்னாலினி ரவி, மம்தா மோகனதாஸ், பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, கருணாகரன், மாளவிகா அவினாஷ் போன்ற பலர் நடித்துள்ளனர்.  இப்படத்திலிருந்த வெளியான 'மால டும் டும்' பாடல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் அர்சிக்கப்பட்டது.  இந்த படம் இன்று 'சோனிலிவ்' ஓடிடி இயங்குதளத்தில் இன்று வெளியாகிறது.

சி.பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான உணர்வுமிக்க காதல் திரைப்படம் '96'.  நந்தகோபால் தயாரித்த இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, ஆதித்யா பாஸ்கர், கௌரி, தேவதர்ஷினி, ஜனகராஜ், வர்ஷா, பகவதி போன்ற பலர் நடித்திருந்தனர்.  கடந்த 2018ம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றதோடு, படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த திரைப்படம் இன்று 'ஆஹா' ஓடிடி இயங்குதளத்தில் வெளியாகிறது.

மேலும் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் த்ரில்லர் கதையம்சம் நிறைந்த வெப் தொடராக உருவாகியுள்ளது 'விலங்கு'.  வழக்கமான த்ரில்லர் படமாக இல்லாமல் மாறுபட்ட கதைக்களத்தில் அமைந்திருக்கும் இதில் விமல் போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார்.  இந்த தொடர் முதன்முதலாக இன்று 'ஜீ5' ஓடிடி இயங்குதளத்தில் வெளியாகிறது, அதனை தொடர்ந்து இந்த தொடர் மேலும் ஜீ தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாக இருக்கிறது.

vilangu

மேலும் படிக்க | வலிமை டிக்கெட் புக்கிங் ஆரம்பம் எப்போது?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News