செப்டம்பர் 4 ‘ஸ்பைடர்’ படத்தின் 2வது சிங்கிள் வெளியீடு!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு நடித்துள்ள படம் ‘ஸ்பைடர்’. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது. பெரும் பொருட்செலவில் தாகூர் மது தயாரித்து வருகிறார்.
மேலும் இந்த படம் வரும் செப்டம்பர் 28-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. முருகதாஸ் சிறு இடைவெளிக்குப் பின் தமிழில் இயக்கும் படம் என்பதால், இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு.
சமிபத்தில் இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு கிடைத்தது. முன்னதாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தில் இருந்து `பூம் பூம்' என்ற ஒரு பாடல் மட்டும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்நிலையில் படத்தில் இருந்து அடுத்த பாடலையும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. `ஆலி ஆலி' என்ற இரண்டாவது பாடல் வருகிற செப்டம்பர் 4-ம் தேதி வெளியாக இருப்பதாக ஏ.ஆர்.முருகதாஸ் அவரது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.