‘ஸ்பைடர்’ படத்தின் `ஆலி ஆலி' பாடல் வெளியானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு நடித்துள்ள படம் ‘ஸ்பைடர்’. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ளது. பெரும் பொருட்செலவில் இப்படத்தினை தாகூர் மது தயாரித்து வருகிறார்.



மேலும் இந்த படம் வரும் செப்டம்பர் 28-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. முருகதாஸ் சிறு இடைவெளிக்குப் பின் தமிழில் இயக்கும் படம் என்பதால், இந்தப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


சமிபத்தில் இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு கிடைத்தது. பின்னர் இப்படத்தில் இருந்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவான `பூம் பூம்' என்ற ஒரு பாடல் மட்டும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. 


இந்நிலையில் படத்தில் இருந்து அடுத்த பாடலையும் வெளியிட படக்குழு முடிவு செய்தது. `ஆலி ஆலி' என்ற இரண்டாவது பாடல் இன்று வெளியாக உள்ளதாக முன்னர் படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த பாடல் வெளியாகியுள்ளது