செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தில் சிம்பு-வின் பெயர் என்ன?
செக்க சிவந்த வானம் திரைப்படத்தில் நடிகர் சிம்புவின் கதாப்பாத்திரம் FirstLook வெளியானது!
செக்க சிவந்த வானம் திரைப்படத்தில் நடிகர் சிம்புவின் கதாப்பாத்திரம் FirstLook வெளியானது!
காற்று வெளியிடை திரைபடத்திற்கு பிறகு இயக்குனர் மணிரதனம் அவர்கள் இயக்கும் படத்துக்கு 'செக்கச்சிவந்த வானம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புராடக்ஷன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பெயர் தமிழில் 'செக்கச்சிவந்த வானம்' என்றும், தெலுங்கில் நவாப் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கின்றார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியை மேற்கொள்கிறார்.
கடந்த பிப்ரவரி 14 முதல் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்கி நடைப்பெற்று வரும் நிலையில் தற்போது இப்படத்தின் நாயகன்கள் கதாப்பாத்திரம் பெயர் மற்றும் தோற்றம் நாள் ஒன்றுக்கு ஒருவர் என்ற விதத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது நடிகர் சிம்புவின் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி இப்படத்தில் நடிகர் சிம்பு, எத்தி என்னும் கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார் என்பது தெரியவந்துள்ளது!
முன்னதாக நடிகர் விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரம் ரசூல் எனவும், நடிகர் அருண் விஜயின் கராப்பாத்திரம் தியாகு எனவும், நடிகர் அரவிந்த் சாமியின் கதாப்பாத்திரம் வரதன் எனவும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது!