தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சுதீப். கன்னடத்தில் நாயகனாகவும், ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் முன்னணி நாயகர்களின் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார் சுதீப்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படுபிஸியான நடிகரான சுதீப் மீண்டும், தற்போது மீண்டும் இயக்குநராகக் களமிறங்கவுள்ளார். தான் இயக்கப்போகும் படத்திற்கான கதை, திரைக்கதையை கொரோனா ஊரடங்கு சமயத்தில் முழுமையாகத் முடித்துவிட்டார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அவரே நாயகனாக நடிக்கவுள்ளார்.  எனினும் ஹிந்தியில் மட்டும் சல்மான்கானை நடிக்கவைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். மேலும், தென்னிந்திய மொழிகளில் அவரை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கவும் போவதாக கூறியுள்ளார்.



கொரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தால் இந்தச் சந்திப்பு திட்டமிட்டபடி நடைபெறவில்லை. விரைவில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.  மேலும், தனது கதைக்கு சல்மான் போன்ற ஆளுமை நிச்சயம் தேவை என்று கூறியுள்ள சுதீப், அவர் தலையசைத்தால் அது போல் மற்றவை எல்லாம் ஓகே என்றும் கூறியுள்ளார். 


கடந்த, 2019 ஆம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் வெளியான தபாங் 3 இந்திப் படத்தில் சல்மானுக்கு வில்லனாக சுதீப்  நடித்திருந்தார்.  சுதீப்புக்கு கோடி கொப்ப 3, விக்ராந்த் ரோனா ஆகிய படங்கள் வரிசையாக உள்ளன. இதற்கு முன்னர் 5 மொழிகளில் வெளியான சுதீப்பின் பயில்வான் படம் சரியாக போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ இன்ஸ்டாகிராமில் ராஷ்மிகா தான் டாப்! போர்ப்ஸ் நாளிதழ் புகழாரம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR