போர்ப்ஸ் (Forbes) ஒரு தனியார் பத்திரிக்கை நிறுவனமாகும். இந்நிறுவனம் வருடம் தோறும் உலக அளவில் சிறந்த நிறுவனங்ளையும், மனிதர்களையும் பட்டியலிடுகின்றது. இப்பட்டியலில் இடம்டபெறுவது உலக அளவில் சிறந்த கெளரவமாக கருதப்படுகின்றது. அந்த வகையில் போர்ப்ஸ் பத்திரிக்கை தற்போது இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் 30 திரை பிரபலங்களை பட்டியலிட்டுள்ளது. அதில் அனைவரையும் ஓரங்கட்டிவிட்டு ஒய்யாரமாக முதலிடத்தை பிடித்தது நிறைய ரசிகர்களின் கனவு கன்னி ராஷ்மிகா மந்தனா தான்.
ALSO READ தீபாவளி வெளியீட்டில் இருந்து தள்ளி போகும் மாநாடு!
பெங்களூருவை சேர்ந்த ராஷ்மிகா திரையுலகில் ஒரு பிஸியான நடிகையாக வளம் வருகிறார். பல மொழிகளிலும் நடித்து புகழ் பெற்றுள்ளார். போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள பட்டியலில் பிரபல நட்சத்திர முகங்களான சமந்தா,விஜய் தேவரகொண்டா மற்றும் யாஷ் போன்ற பிரபலங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு இவர் முன்னணி வகிக்கிறார். திரை பிரபலங்களின் பதிவுகளுக்கு கிடைக்கும் லைக்குகள், கமெண்டுகள்,மற்றும் அவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கைகள், அவர்கள் பதிவேற்றும் வீடியோக்களின் வியூஸ், பதிவுகளின் ரீச் ஆகியவற்றை கணக்கிட்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் ராஷ்மிகா 9.88 /10 புள்ளிகளை பெற்றுள்ளார். விஜய் தேவரகொண்டா 9.67/10,யாஷ் 9.54/10 ,நடிகை சமந்தா 9.49/10 புள்ளிகளை பெற்றுள்ளனர் .மேலும் பிரபல தென்னிந்திய நடிகரான சூர்யா 9.37/10 புள்ளிகளை பெற்று 9-வது இடத்தை பெற்றுள்ளார். மேலும் அதில் மகேஷ்பாபு, ராம் சரண், தனுஷ், ஜூனியர் என்டிஆர், காஜல் அகர்வால், ராஷி கண்ணா, ரகுல் பிரீத் சிங், இலியானா, நானி, சாய் பல்லவி, டோவினோ தாமஸ், அகில் அக்கினேனி, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சாய் தரம் தேஜ், மாதவன், வருண் தேஜ், விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஆகியோர் முறையே 30-வது இடம் வரை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதனை கண்ட ராஷ்மிகாவின் ரசிகர்கள் இந்த பெருமையினை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
ALSO READ விஜய்யை பற்றி ஒரு வார்த்தை: மனம் திறந்த பூஜா ஹெக்டே!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR