என்னுடைய பெயர் சுந்தர் சி இல்லை! இதுதான் என் பெயர்! விளக்கம் அளித்த சுந்தர் சி!
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சி தனக்கு ஏன் இப்படி பெயர் வந்தது என்கிற பெயர்காரணத்தை கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சி-ன் படங்கள் பெரும்பாலும் ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு படமாக அமைந்திருக்கிறது. சுந்தர்.சி கைவண்ணத்தில் உருவாகும் படங்கள் பெரும்பாலும் சலிப்படைய செய்யாது என்கிற கருத்து பரவலாக நிலவி வருகிறது. மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர் 1995ம் ஆண்டு வெளியான 'முறை மாமன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இயக்குனராக பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர் 2006ம் ஆண்டு வெளியான 'தலைநகரம்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் இயக்கத்தில் வெளியான திகில் நிறைந்த 'அரண்மனை' படத்தின் மூன்று பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் படிக்க | தனிவிமானம்..வீடுகள்..கார்கள்..பிசினஸ்..தலைச்சுற்ற வைக்கும் நயன்தாரா சொத்து மதிப்பு
தனக்கு சுந்தர்.சி என்று பெயர் வந்ததற்கு காரணம் என்னவென்று இவர் முன்னர் அளித்த பேட்டியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் கூறுகையில், முறை மாமன் படத்தின் போது தான் போட்ட கையெழுத்தில் சி.சுந்தர் என்று போடுவதற்கு சோம்பேறிப்பட்டு சுந்தர்.சி என்று போட்டுவிட்டேன். அப்போது என்னோடு கூட்டாளியாக இருந்த சுராஜ், பிரபு சாலமன், செல்வபாரதி ஆகியோர் பட டைட்டிலில் சுந்தர்.சி என்று போட்டுவிட்டனர். பின்னர் நான் அந்த காபியை பார்த்து ஏன் இப்படி போட்டீர்கள் என்று கேக்க, நீ போட்ட கையெழுத்தில் அப்படி இருந்தது அதனால் தான் சுந்தர்.சி என்று போட்டோம் என்று கூறினார்கள். அந்த சமயத்தில் பெயர் திருத்தும் செய்ய நேரமில்லாததால் நானும் விட்டுவிட்டேன், அந்த படம் ஹிட் ஆகிவிட்டது.
அதனையடுத்து 'முறை மாப்பிள்ளை' படத்தில் சி.சுந்தர் என்று சரியாக பெயர் போடப்பட்டது, ஆனால் அந்த படம் தோல்வியடைந்தது. அப்போது என் நண்பர்கள் சுந்தர்.சி என்கிற பெயர் தான் ராசியானது அதையே வைக்கலாம் என்று கூறியதும் அடுத்ததாக 'உள்ளத்தை அள்ளித்தா' படத்திற்கு சுந்தர்.சி என்று வைத்ததும் அப்படம் ஹிட்டானது, இப்படித்தான் எனக்கு இந்த பெயர் வந்தது என்று கூறியுள்ளார். மேலும் தனது மனைவிக்கு போன் செய்யும்போது கூட சுந்தர்.சி என்று கூறினால் தான் தெரிகிறது என்றும் நகைச்சுவையாக கூறியுள்ளார்.
மேலும் படிக்க | இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள விலகலா..கிழக்கு வாசல் சீரியலில் டுவிஸ்ட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ