சுந்தர் சி இயக்கத்தில் வந்த காமெடிப் படம் "கலகலப்பு". இந்த படத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோர் நடித்திருந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தற்போது இப்படத்தின் 2ம் பாகத்தையும் சுந்தர் சி தான் இயக்குகிறார். அதில், ஜெய், ஜீவா, நிக்கி கல்ராணி ஆகியோர் உறுதி செய்யப்பட்டுள்ளனர். மேலும் கலகலப்பு இரண்டாம் பாகத்தில் ஓவியா நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. 


அடுத்த மாதம் காசி, புனே, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் கலகலப்பு 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கயிருக்கிறது. இப்படத்திற்கு மீசையை முறுக்கு ஹீரோ ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார்.  'அவ்னி மூவிஸ் '  சார்பாக சுந்தர் சி'யும் அவரது மனைவி குஷ்பூவும்  இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக குறிப்பிடத்தக்கது.