இசைஞானி இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள். மோடியின் ஆட்சியை பார்த்து அம்பேத்கர் பெருமைப்படுவார்” என குறிப்பிட்டிருந்தார்.



அவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சையாக மாறி இருக்கிறது. மேலும், இளையராஜா இந்தக் கருத்தை திரும்பப் பெற வேண்டுமென பலர் வலியுறுத்தினர். ஆனால், கருத்தை பின்வாங்கப்போவதில்லை என்பதில் இளையராஜா தெளிவாக இருக்கிறார்.


இதற்கிடையே அவருக்கு பாஜகவினர் தங்களது முழு ஆதரவை கொடுத்துவருகின்றனர். அதேசமயம் சமூக வலைதளங்களில் இளையராஜாவை பலர் கடுமையாக தாக்கினர்.


 



சூழல் இப்படி இருக்க இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ், பிரதமரை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என கூறியது இளையராஜா குறித்த சர்ச்சையை சற்று ஓய வைத்தது.


மேலும் படிக்க | சமூக வலைத்தளத்தை விட்டு விலகும் பிரபல நடிகர்! காரணம் இதான்


இந்நிலையில் இளையராஜா பாடல் ஒன்றை பாடி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தளபதி படத்தில் இடம்பெற்ற சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலில் வரும் “நான் உன்னை நீங்கமாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் என்ற வரிகளை பாடும் அவர் கூடுதலாக, “பாடுவேன் உனக்காகவே... இந்த நாள் நன்னாள் என்று பாடு. என்னதான் இன்னும் உண்டு கூறு” என்ற வரிகளையும் சேர்த்து பாடியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகியுள்ளது.


மேலும் படிக்க | கவர்ச்சியாக இல்லை அழகாக உணர்கிறேன் - காஜல் அகர்வால் நெகிழ்ச்சி


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR