சமூக வலைத்தளத்தை விட்டு விலகும் பிரபல நடிகர்! காரணம் இதான்

நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைதளங்களில் இருந்து சிறிது நாட்கள் விலக முடிவு எடுத்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Apr 22, 2022, 07:23 AM IST
  • விஷ்ணு விஷால் சமூக வலைதளங்களில் இருந்து ஒய்வு.
  • சிறிது நாட்கள் கழித்து மீண்டும் இணைய உள்ளார்.
  • முக்கிய வேலைகள் உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளார்.
சமூக வலைத்தளத்தை விட்டு விலகும் பிரபல நடிகர்! காரணம் இதான் title=

நடிகர் விஷ்ணு விஷால் கடைசியாக பிப்ரவரி 2022-ல் வெளியான ‘எஃப்ஐஆர்’ படத்தில் நடித்து இருந்தார்.  இந்த படம் வணிக ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.  மேலும், ஓடிடி தளத்திலும் நல்ல விலைக்கு விற்பனையானதாக கூறப்பட்டது.  தற்போது விஷ்ணு விஷால் நடிகர் ரவி தேஜாவுடன் இணைந்து தற்காலிகமாக ‘விவி 18’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பைத் சமீபத்தில் தொடங்கியது.  

மேலும் படிக்க | ‘ராக்கி பாய்’ இடத்தில் இனி சூர்யா?! - ‘KGF’ டீம் எடுத்த அதிரடி முடிவு!

சமூக வலைதளங்கள் மூலம் தனது தனிப்பட்ட மற்றும் சினிமா வாழ்க்கையை எப்போதும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விஷ்ணு விஷால், தற்போது சமூக வலைதளங்களில் இருந்து ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளார்.  தனது ட்விட்டரில் பக்கத்தில், "வணக்கம் நண்பர்களே... ஓய்வு எடுப்பது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது... சமூக ஊடகங்களில் இருந்து சிறிது நாள் ஓய்வு எடுத்துக்கொள்கிறேன்... விரைவில் சந்திப்போம்" என்று கூறியுள்ளார்.  இது விஷ்ணு விஷால் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

 

விஷ்ணு விஷால் 2009 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். கடந்த பத்தாண்டுகளில், இவர் பல வெற்றி படங்களையும் சில தோல்வி படங்களையும் கொடுத்துள்ளார்.  மேலும் தனது நடிப்பிற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார். 2019-ல் வெளியான ‘ராட்சசன்’ திரைப்படத்திற்குப் பிறகு அவரது புகழ் உயர்ந்தது. நடிகராக மட்டுமல்லாமல், சில தமிழ் படங்களையும் தயாரித்துள்ளார்.  தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் ‘மோகன்தாஸ்’ படம் விரைவில் வெளிவர உள்ளது.  இப்படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. ‘மோகன்தாஸ்’ படத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திரஜித் சுகுமாரன், கருணாகரன், லல்லு ஆகியோர் நடித்துள்ளனர். முரளி கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தை விஷ்ணு விஷால் தனது சொந்த பேனரில் தயாரித்துள்ளார்.

mohandas

மேலும் படிக்க | ‘பீஸ்ட்’ படத்தோட ஒரிஜினல் க்ளைமாக்ஸ் இதுதானாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News