கவர்ச்சி நடிகையான சன்னிலியோன், இந்தி பிக்பாஸ் சீசன் 5-ல் (BIGBOSS) போட்டியாளராக கலந்து கொண்டார். வைல்டு கார்டு என்டிரியாக நுழைந்த அவர், 91வது நாளில் போட்டியில் இருந்து வெளியேறினார். அந்த சீசனுக்குப் பிறகு மிகவும் பிரபலமான அவர், அடுத்தடுத்த சீசன்களில் சிறப்பு அழைப்பாளராக பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். அண்மையில், பிக்பாஸ் சீசன் 15 நிகழ்ச்சிக்கு சென்ற அவர், தன்னுடைய லேட்டஸ்ட் ஆல்பம் பாடல் ஒன்றை ரிலீஸ் செய்து, சல்மான் கானுடன் நீண்ட நேரம் உரையாடினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | நடிகர் விஜய் நண்பர்களுக்கு உதவமாட்டாரா- சஞ்சீவ் ஓபன் டாக் !


இதனால், சன்னிலியோன் பிக்பாஸ் சீசன் 15-லும் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவின. இது தொடர்பாக பேசிய அவர், பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டது தனக்கு திருப்பு முனையாக இருந்தாலும், இப்போது அதற்கான தேவை ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பலமுறை பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுவந்துவிட்டதால், மீண்டும் அங்கு செல்லும் எண்ணம் தனக்கில்லை எனக் கூறியுள்ளார். தன்னுடைய குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு இருப்பதால், அவர்களை விட்டு விலகியிருக்க விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அவரின் இந்த பேட்டிக்குப் பிறகு, சன்னி லியோன் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கிறார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸைப் பொறுத்த வரை, ஆரம்ப கட்ட சீசன்களில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் அடுத்தடுத்த சீசன்களில் மீண்டும் போட்டியாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில், ராக்கி சவாந்த், விகாஷ் குப்தா, காஷ்மீரா ஷா ஆகியோர் இதற்கு முந்தைய சீசன்களில் போட்டியாளர்களாக கலந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு அடுத்தடுத்த சீசன்களிலும் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த சீசனிலும் சிலர் போட்டியாளர்களாக உள்ளனர்.


ALSO READ | பிக்பாஸில் ’ஹிப்ஹாப் ஆதி’ - போட்டியாளர்கள் மகிழ்ச்சி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR