சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!
Oh My Ghost movie review : சன்னி லியோன், சதீஷ், ரமேஷ் திலக், தர்ஷா குப்தா நடித்துள்ள ஓ மை கோஸ்ட் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
Oh My Ghost movie review : காமெடியனாக தமிழ் சினிமாவிற்கு வந்த சதீஷ் தற்போது கதையின் நாயகனாகவும் பல படங்களை நடித்து வருகிறார். அந்த வகையில் சதீஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சன்னி லியோன் தமிழில் முதன் முறையாக நடித்துள்ளார். ஓ மை கோஸ்ட் படத்தில் சன்னி லியோன் நடிப்பதாக தகவல்கள் வெளியானதில் இருந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே பெரும் அளவில் இருந்தது. யுவன் இயக்கியுள்ள இந்த படத்தில் சதீஷ், சன்னி லியோன், ரமேஷ் திலக், தர்ஷகுப்தா என பலர் நடித்துள்ளனர்.
நண்பர்களான சதீஷ் மற்றும் ரமேஷ் திலக் A படங்களுக்கான கதைகளை தயார் செய்து அதில் நடிப்பதற்கு நடிகர்களை தேடி கொண்டுள்ளனர். சதீஷின் காதலியான தர்ஷா குப்தாவிற்கு அடிக்கடி பேய் கனவுகள் வருகிறது, இந்நிலையில் ஒரு நாள் சதீஷ் மற்றும் ரமேஷ் திலக் இறப்பது போல் தர்ஷாவிற்கு பேய் கனவு வர உடனடியாக இவர்களை பார்க்க இவர்களது வீட்டிற்கு வருகிறார். அப்போது தர்சா குப்தாவின் உடலில் ஒரு பேய் புகுந்து விடுகிறது, உடனடியாக தன்னை அனகொண்ட புரத்திற்கு கூட்டிச் செல்லும்படி கேட்கிறது. மூன்று பேரும் அங்கு செல்ல பிறகு என்ன ஆனது என்பதே ஓ மை கோஸ்ட் படத்தின் கதை.
மேலும் படிக்க | பிக்பாஸ் வீட்டில் காதலியுடன் ரொமான்ஸ் செய்த கதிரவன், மனம் உடைந்த ஷிவின்
முதல் பாதி முழுக்கவே சதீஷ் மற்றும் ரமேஷ் திலக் இணைந்து செய்யும் காமெடி கலாட்டாக்கள் பல இடங்களில் சிரிப்பை ஏற்படுத்துகிறது, அவர்கள் எடுக்கும் படத்தில் யாரையாவது நடிக்க வைக்க வேண்டும் என்று அவர்கள் செய்யும் முயற்சி ரசிக்க வைக்கிறது. வழக்கம்போல சதீஷ் தனது ஒன்லைன் பஞ்சுகளில் அசத்தியுள்ளார். சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த தர்ஷா குப்தாவிற்கு ஒரு முழு நீள படமாக ஓ மை கோஸ்ட் அமைந்துள்ளது, நடிப்பிலும் அழகிலும் அசத்தியுள்ளார் தர்ஷா குப்தா. இரண்டாம் பாதியில் வரும் சன்னி லியோன் மொத்த கதையும் எடுத்து செல்கிறார். அவரது ஸ்கிரீன் ப்ரெசென்ட் நன்றாக இருந்தாலும் நடிப்பிலும் சற்று முன்னேற்றம் தேவைப்படுகிறது. மேலும் டப்பிங் அவருக்கு சரியாக இடம்பெறவில்லை.
வழக்கமான பேய் பட கதைகளில் புதிதாக சில காட்சிகளை யோசித்துள்ளார் இயக்குனர் யுவன். காமெடி சில இடங்களில் நன்றாக இருந்தாலும் பெரும்பாலான இடங்களில் கை கொடுக்கவில்லை. படத்திற்கு அதிகம் செலவு செய்துள்ளனர், இருப்பினும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு கூடுதலாக செலவு செய்திருக்கலாம். ஏனெனில் சரியான கிராபிக் காட்சிகள் இல்லாதது கதையினுல் நம்மை ஒன்ற விடாமல் செய்கிறது. யோகி பாபு, ஜிபி முத்து கெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ் கொடுத்துள்ளனர். சன்னி லியோன் ரசிகர்கள் கண்டிப்பாக ஓ மை கோஸ்ட் படத்தை திரையரங்குகளில் பார்க்கலாம்.
மேலும் படிக்க | மொழி பிரச்னையை தூண்டுகிறார் - சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சி புகார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ