சமீபத்தில் ஷோசியல் மீடியாவில் அதிகம் பேசப்பட்டு வரும் நபர் தான் அதிதி சங்கர். பிரம்மாண்ட இயக்குநர் சங்கரின் மகள் தான் இவர். கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். பலரும் இவரை புகழ்ந்து வரும் நிலையில், புதிய சர்ச்சையில் இவர் சிக்கியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விருமன் படத்தின் இரண்டாம் பாடலான 'மதுர வீரன் அழகுல' வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த பாடலை பாடியதும் அதிதி தான். தனது அறிமுக படத்திலேயே பாடலும் பாடி அசத்தியுள்ளார். விருமன் ஆடியோ வெளியீட்டு விழாவில் அதிதி அனைவரும் முன்பும் பாடிக்காட்டினார். இந்நிலையில், அதிதி பாடிய மதுர வீரன் பாடலை முதலில் பாடியது சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி என்றும் ஆனால் வேண்டுமென்றே அவர் பாடிய பாடலை அதிதியை வைத்து பாட வைத்து அவரை ஓரம்கட்டியதாகவும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். 


புஷ்பா படத்தில் சாமி சாமி பாடலை பாடியிருந்தார் ராஜலட்சுமி. அந்த பாடல் மிகப்பெரிய ரீச் ஆனது. இதனை அடுத்து யுவன் சங்கர் ராஜா மதுர வீரன் பாடலுக்காக ராஜலட்சுமியை வைத்து முதலில் ரெக்கார்டிங் செய்துள்ளார். ஆனால் பாடல் வெளியான பின்பு தான் ராஜலட்சுமிக்கு தன் குரலில் இந்த பாடல் வராமல், அதிதி சங்கர் குரலில் வந்தது தெரியவந்துள்ளது. அதற்குள் நெட்டிசன்கள் இது நெப்போடிசம், இயக்குநர் மகள் என்பதால் அவரை பாட வைத்தார்களா? அப்படி என்றால் ராஜலட்சுமியின் கதி என்ன என்று எல்லாம் கேள்விகள் எழுப்பி வந்தனர். 


மேலும் படிக்க: விருமன் மதுர வீரன் பாடலை முதலில் பாடியது ராஜலட்சுமியா? கிளம்பும் புதிய சர்ச்சை!


இதற்கு எல்லாம் பதில் அளிக்கும் வகையில், தனியார் நாளிதழுக்கு பேட்டி அளித்த ராஜலட்சுமி, தன்னை வைத்து தான் மதுர வீரன் பாடலை முதலில் ரெக்கார்ட் செய்தார்கள் என்றும், தற்போது அதிதி பாடியதால் எந்த சிக்கலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அதோடு இசையமைப்பாளர்கள் பொதுவாக, பலரையும் பாட வைத்து, அந்த பாடலுக்கு யார் சரியானவர்களோ அவர்கள் குரலை தேர்வு செய்வது வழக்கமான ஒன்று தான் எனவும் தனக்கு யுவன் இசையில் பாட வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயம் என்றும் கூறியுள்ளார். அதோடு அதிதி மிகவும் அழகாக பாடுகிறார் என்பதால் அவர் குரலை யுவன் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றும் ராஜலட்சுமி பேட்டியில் பேசியுள்ளார். 


சில தினங்களுக்கு முன்பு தான் தெருக்குரல் அறிவின் என்ஜாயி என்ஜாமி பாடல் சர்ச்சை வெடித்தது. அந்த பாடலை எழுதி, இசையமைத்து, பாடிய அறிவு பல மேடைகளில் ஓரம்கட்டப்பட்டதாக விமர்சனம் எழுந்தது. அறிவும் இதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து அந்த பாடலின் சக பாடக தீயும், அவரது தந்தையும் இசையமைப்பாளருமான சந்தோஷ் நாராயணனும் அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்த பிரச்சனை முடிவதற்குள் அதிதியால் ராஜலட்சுமி ஓரம்கட்டப்பட்ட சர்ச்சை எழுந்துள்ளது. தமிழ் சினிமாவிலும் பாலிவுட் சினிமா போல நெப்போடிசன் எழுந்துள்ளதா என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


மேலும் படிக்க: விருமன் பஞ்சாயத்து ஓவர் - வருத்தம் தெரிவித்தார் பாடலாசிரியர் சினேகன்


இந்தி சினிமா பாலிவுட், தெலுங்கு சினிமா டோலிவுட், தமிழ் சினிமா கோலிவுட், கேரளா சினிமா மல்லுவுட், கன்னட சினிமா சண்டல்வுட் தொடங்கி பெங்காலி, போஜ்புரி, மராத்தித் திரைப்படத்துறை என இந்திய சினிமா துறையில் ஆரம்பம் முதல் இன்று வரை நெப்போடிசம் சர்ச்சை எழுந்த வண்ணம் உள்ளது. நெப்போடிசம் காரணமாக சிலர் மன உளைச்சலுக்கு ஆளாகி தங்களை மாய்த்துக்கொண்டதும் உண்டு. பலர் ஓரங்கட்டப்பட்டதும் உண்டு. நெப்போடிசம் பிரச்சனைக்கு எப்பொழுதுதான் தீர்வு கிடைக்கும் என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்துக்கொண்டே தான் இருக்கிறது. அதற்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை என்பது தான் நிதர்சனம்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ