தனது தந்தையின் பிறந்தநாளன்று தனது வரவிருக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் திரைப்படத்தின் தலைப்பு வெளியிடும் பாரம்பரியத்தைப் பின்பற்றிய டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு இந்த ஆண்டும் அவ்வாறே செய்துள்ளார். மகேஷ் பாபு தனது 27வது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் திரைப்படத்தின் தலைப்பை ஆன்லைனில் வெளியிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகேஷ் பாபுவின் 27வது திரைப்படத்திற்கு "சர்காரு வாரி பாட்டா" என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை இளம் இயக்குனர் பரசுராம் பெட்லா இயக்கவுள்ளார், மேலும் வலுவான தொழில்நுட்ப கலைஞர்களும் இதில் பணியாற்றவுள்ளனர், எஸ்.எஸ்.தமனின் இசையுடன் பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்யவுள்ளார் மற்றும் மார்தண்ட் கே. வெங்கடேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார்.


மிஸ்ரி மூவி மேக்கர்ஸ், ஜிஎம்பி என்டர்டெயின்மென்ட், 14 ரீல்ஸ் பிளஸ் ஆகியவற்றின் ஹாட்ரிக் கூட்டணி சர்காரு வாரி பாட்டாவில் இணைகிறது. இந்த கூட்டணி சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் 27வது திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் கொடுக்கும் என்பதை உறுதிசெய்கிறது. இந்த மூன்று திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் திரைக்கதைகளுடன் ரசிகர்களின் மனதை வெல்வதில் பெயர்போனவர்கள்.


சர்காரு வாரி பாட்டா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், மகேஷ் பாபு தனது கழுத்தில் ஒரு பழைய ரூபாய் நாணயத்தைப் பச்சை குத்தியதோடு, ஒரு காதணி மற்றும் நீண்ட கூந்தலுடன் புதிய தோற்றத்தில் காட்சியளிக்கிறார். மகேஷ் பாபு தனது 27வது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஒரு ட்வீட் மூலம் வெளியிட்டார். 


 



 


 


(மொழியாக்கம்: தமிழ்ச் செல்வன்)