எதற்கும் துணிந்தவன் படத்தின் புதிய அப்டேட்!
எதற்கும் துணிந்தவன் படத்தில் இருந்து இரண்டாவது பாடல் நாளை மாலை வெளியாக உள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் 'எதற்கும் துணிந்தவன்'. இப்படத்தில் வினய் ராய் , பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, M.S.பாஸ்கர்ஜெயப்பிரகாசு, தேவதர்சினி, சுப்பு பஞ்சு அருணாச்சலம், இளவரசு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
ALSO READ | நயன்தாராவுடன் நடிக்கும் யூட்யூப் ஸ்டார் ரித்து!
ஜெய் பீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து 'எதற்கும் துணிந்தவன்' தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மதம் 4-ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது. சூர்யாவின் சூரரைப்போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய படங்கள் OTTயில் வெளியானது. நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யாவின் படம் திரையரங்கில் வெளியாக இருப்பதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
10 நாட்களுக்கு முன்பு எதற்கும் துணிந்தவன் படத்தில் இருந்து முதல் சிங்கிள் வெளியானது. இப்பாடல் வரிகளை விக்னேஷ் சிவன் எழுத, G.V.பிரகாஷ் மற்றும் அனிருத் ஆகியோர் பாடியுள்ளனர். "வாடா தம்பி" எனும் இந்த குத்து பாடலில் கிராமத்தான் கெட்டப்பில் சூர்யா மாஸாக ஆடியுள்ளார். இந்நிலையில் நாளை மாலை 6 மணிக்கு எதற்கும் துணிந்தவன் படத்தில் இருந்து இரண்டாவது பாடல் வெளிவர உள்ளதாக பட நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த பாடலை யுகபாரதி எழுத பிரதீப்குமார்,வந்தனிசம், பிருந்தாமாணிக்கவாசகன் என 3 பாடகர்கள் பாடி உள்ளனர். இது லவ் சாங் ஆக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. நாளை மாலை 6 மணிக்காக சூர்யா ரசிகர்கள் இப்போதிலிருந்தே காத்து கொண்டுள்ளனர்.
ALSO READ | நடிகர் விஜய் நண்பர்களுக்கு உதவமாட்டாரா- சஞ்சீவ் ஓபன் டாக் !
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR