வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் 'வாடிவாசல்'. இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் சூர்யா (SURYA) நடித்துள்ளார். சி.சு.செல்லப்பா எழுதிய 'வாடிவாசல்' நாவலை வைத்தே, 'வாடிவாசல்' படம் உருவாகவுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் இப்போதே தொடங்கி நடைபெற்று வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூர்யா (SURYA)வின் பிறந்த நாளை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது 'வாடிவாசல்' படக்குழு. அந்தப் படத்தின் சூர்யாவின் கதாபாத்திர வடிவமைப்புக்காக பல்வேறு லுக்குகள் திட்டமிடப்பட்டு, இறுதியாக ஒரு லுக்கை முடிவு செய்துள்ளனர். அந்தக் கதாபாத்திர வடிவமைப்பையே போஸ்டராக வெளியிட்டுள்ளது படக்குழு. 


 


ALSO READ | சூர்யாவின் 'அஞ்சான்' செய்த அசத்தல் சாதனை....வியப்புல் மக்கள்....


 



 



தாணு தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராகவும் பணிபுரியவுள்ளனர்.


 


ALSO READ | WATCH: வைரலாகும் சர்ச்சை இயக்குனர் RGV-யின் 'பவர் ஸ்டார்' Trailer...


தற்போது சூர்யா (SURYA) நடிப்பில் 'சூரரைப் போற்று' படம் தயாராகவுள்ளது. கரோனா அச்சுறுத்தல் முடிந்து திரையரங்குகள் திறந்தவுடன் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப் படத்துக்குப் பிறகு ஹரி இயக்கத்தில் 'அருவா ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார்.  இதை தவிர்த்து இயக்குநர் பாண்டிராஜ் உடன் படம் பண்ணவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.