பொன்னியின் செல்வன் படத்தை நிராகரித்த பிரபலங்கள்
பொன்னியின் செல்வன் படத்தின் வாய்ப்பை சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் நிராகரித்தது ஏன்? என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படம் எடுக்க வேண்டும் என எம்.ஜி.ஆர் முதல் பலர் முயன்றும் சாத்தியபடுத்த முடியாததை, தீவிர முயற்சியால் மணி ரத்னம் சாத்தியமாக்கியிருக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வனின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மிகப்பிரம்மாண்டமாக ரிலீஸாக இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பிரகாஷ்ராஜ், சரத்குமார் மற்றும் ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட உட்ச நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.
மேலும் படிக்க | சதாபிஷேகத்துக்கு விஜய் வராதது ஏன்? தந்தை ஏஸ்ஏசி ஓபன் டாக்
அண்மையில் வெளியிடப்பட்ட டிரெய்லர் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில், வரலாற்று சிறப்பு மிக்க இந்த திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆரம்பத்தில் சில நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஒரு சிலர் ஒப்புக்கொண்டு பின்னர் படப்பிடிப்பில் இருந்து விலகினர். சிலர் தேதி பிரச்சனை காரணமாக படத்தில் நடிக்க முடியாமல் போனது. அவர்களில் நடிகர் சூர்யாவும் ஒருவர். முக்கிய ரோலில் நடிக்க மணிரத்னம், சூர்யாவை அணுகியிருக்கிறார். ஆனால் தேதி பிரச்சனை காரணமாக அவரால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது.
இதேபோல் பாகுபலி மூலம் உலகளவில் பேசப்பட்ட சத்யராஜ், பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. படக்குழுவும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. இதில் சுமூகமான முடிவுகள் எட்டமுடியாததால் சத்யராஜ் நடிக்கவில்லை. நீண்ட நாட்கள் தேதி ஒதுக்க வேண்டியிருந்ததாலும், படப்பிடிப்புகள் தள்ளிப்போய்க் கொண்டே இருந்ததாலும், சத்யராஜ் நடிக்கவில்லையாம். அணுஷ்கா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கும் முதலில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அனுஷ்கா தொடக்கத்திலேயே மறுக்க, கீர்த்தி சுரேஷ் ஒப்புக்கொண்டு கடைசியில் படப்பிடிப்பில் இருந்து விலகியிருக்கிறார்.
மேலும் படிக்க | சின்மயி விவகாரம் குறித்து பேசிய வைரமுத்து!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR