சுழல் வெப் சீரிஸ் - ரிலீஸ் எப்போது?
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் வெப் சீரிஸின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓடிடி தளங்களின் அதிகரிப்பைத் தொடர்ந்து வெப் சீரிஸ்களின் வரவுகளும் அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் தயாராகும் வெப் சீரிஸ்களுக்கு இந்தியாவில் கிடைக்கும் ஆதரவும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இதனையடுத்து இந்தியாவிலும் ஃபேமிலி மேன் உள்ளிட்ட வெப் சீரிஸ்கள் உருவாகி வரவேற்பைப் பெற்றன.
தற்போது தமிழ் மொழியிலும் வெப் சீரிஸ்கள் உருவாக ஆர்மபித்திருக்கின்றன. அந்த வகையில் அமேசான் ப்ரைம் நேரடியாக தமிழில் ‘சுழல்’ வெப் சீரிஸ் ஒன்றை தயாரித்திருக்கிறது.
இதற்கு, விக்ரம் வேதா படத்தின் மூலம் கவனம் ஈர்த்த புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் திரைக்கதை எழுதியிருக்கின்றனர். இதில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா, கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
மேலும் படிக்க | கேஜிஎப்2 திரைப்படத்தை இலவசமாக பார்க்கலாம் - கட்டணத்தை ரத்து செய்த அமேசான்
தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த வெப் சீரிஸின் பணிகள் மும்முரமாக நடந்துவந்தன.
தற்போது அதன் முழு பணிகளும் முடிவடைந்துவிட்டதால் சுழல் வெப் சீரிஸ் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது. இந்நிலையில் சுழல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஜூன் 17ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் சுழல் வெளியாக இருக்கிறது.
மேலும் படிக்க | கமல்ஹாசனின் விக்ரம் படத்தை பார்க்க வேண்டிய முக்கிய காரணங்கள்!
மேலும், தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் மட்டுமல்லாமல் 30க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த வெப் சீரிஸ் ஒளிபரப்பப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR