கமல்ஹாசனின் விக்ரம் படத்தை பார்க்க வேண்டிய முக்கிய காரணங்கள்!

சூர்யாவின் கேரக்டரில் விக்ரம் 2 உருவாக்கும் வாய்ப்பு இருப்பதாக கமல் தெரிவித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jun 5, 2022, 11:44 AM IST
  • விக்ரம் படம் வசூல் சாதனை படைத்துள்ளது.
  • வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த படங்களின் சாதனையை முடியடித்துள்ளது.
  • கமல் கேரியரில் முக்கிய படமாக அமைந்துள்ளது.
கமல்ஹாசனின் விக்ரம் படத்தை பார்க்க வேண்டிய முக்கிய காரணங்கள்!  title=

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவான அதிரடி ஆக்ஷன் திரைப்படமான விக்ரம் ஜூன்-3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  கடந்த நான்கு வருடங்களாக கமல் படங்களில் நடிக்காமல் இருந்தாலும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.  மேலும் தீவிர அரசியலில் இறங்கி அவரை பற்றி அடிக்கடி செய்திகளும் வெளியாகிக்கொண்டே தான் இருந்தது.  ஒருபோதும் அவர் மக்களுடன் இடைவினையாற்றுவதை நிறுத்தாமல் தான் இருந்து வந்தார்.  பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விக்ரம் படம் அனைவரையும் திருப்திப்படுத்தி இருக்கிறது, இந்த ஆண்டில் ரசிகர்கள் எதிர்பார்த்த பெரிய ஹீரோக்களின் படங்கள் திருப்தியளிக்காமல் போன நிலையில் இப்படம் அனைவரையும் மகிழ செய்துள்ளது. 

மேலும் படிக்க | 'விக்ரம்' படத்திற்கு பிறகு கமல் நடிக்கும் படம்!

ஒரே படத்தில் தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்கள் ஒன்றாக நடித்திருப்பது அரிதான ஒன்று. ஆனால் இந்த படத்தில் அந்த அரிதான விஷயம் நடந்துள்ளது.  ஒரே படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஃபகத் பாசில் மற்றும் சூர்யா ஆகியோரை வைத்து லோகேஷ் கனகராஜ் ஒருவித நடிகர் கூட்டத்தையே உருவாக்கியுள்ளார்.  இந்த படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஃபகத் பாசில் ஆகியோர் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில் எதிர்பாராதவிதமாக சூர்யாவை கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிக்கவைத்து இயக்குனர் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். படத்தில் சூர்யா இருப்பதை மறைமுகமாக காட்டும் விதமாக சூர்யாவின் கண் மட்டும் தெரியும்படியான டிரெய்லரை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார். 

Surya

லோகேஷ் இதுவரை எடுத்து மூன்று படங்கள்தான், ஆனால் தற்போது இவர் தமிழ் திரையுலகில் பெரிய ஆளுமையை ஏற்படுத்தியுள்ளார்.  2019ல் வெளியான கைதி படம் இவருக்கு பேரும், புகழும் பெற்று தந்தது, அதற்கு முன்னர் இவர் இயக்கிய மாநகரம் படமும் சிறப்பான வரவேற்பை பெற்றது.  அதனைத்தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து இயக்கிய மாஸ்டர் படம் வேற லெவல் வரவேற்பை பெற்றது.  இவர் இயக்கிய மொணன்று படங்களும் தனித்துவமான வெற்றியினையும், பாராட்டையும் பெற்றது.  தற்போது அவர் குருவாக கருதும் கமல்ஹாசனை வைத்து இயக்கி ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்துள்ளார், இதுதான் அவரின் உண்மையான வெற்றி. 

படத்தின் ஆக்ஷன் காட்சிகள் ஒவ்வொன்றையும் இயக்குனர் லோகேஷ் செதுக்கியுள்ளார்.  ஆக்ஷன் காட்சிகளில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளின் பல்வேறு அளவுகள் மற்றும் வடிவங்களை தேர்ந்தெடுக்க இயக்குனர் இரண்டு மாதங்கள் செலவிட்டுள்ளார்.  ரிவால்வரில் இருந்து பெரிய விமானத்தை வீழ்த்தும் திறன் கொண்ட இயந்திர துப்பாக்கி வரை ஒவ்வொன்றையும் கற்பனை செய்து அதனை அழகாக செய்லபடுத்தி இருக்கிறார்.  ஸ்டண்ட் காட்சிகளை ஸ்டண்ட் ஜோடிகளான அன்பு மற்றும் அறிவு ஆகியோர் கோரியோக்ராப் செய்துள்ளனர், படத்தின் சண்டை காட்சிகள் ஒவ்வொன்றும் அனைவரையும் இருக்கையின் நுனிக்கு கொண்டுவரும் விதமாக பிரம்மாண்டமாக அமைந்தது.

'விக்ரம்' என்பது கமல்ஹாசன் நடிப்பில் 1986 ஆம் ஆண்டு வெளியான படத்தின் தலைப்பு.  இது ஒரு உளவாளியைப் பற்றியது, அவர் ஒரு சர்வதேச சதியில் ஈர்க்கப்பட்டு, ராக்கெட் குண்டு வெடிப்பதைத் தடுக்கிறார்.  ஆனால் இந்த விக்ரமுக்கும், பழைய விக்ரமுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.  இப்படம் சற்று கைதி படத்துடன் ஒத்துப்போவது போல் இருக்கிறது.  இதற்கிடையில், சூர்யாவின் கேரக்டரில் விக்ரமின் தொடர்ச்சியை உருவாக்கும் வாய்ப்பு இருப்பதாக கமல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகிறார் மிஷ்கின்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News