நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு எவ்வளவு: திரையுலகில் அதிகமாக வலம் வந்துக்கொண்டிருக்கும் நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அதிகமாக பேசப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகை தமன்னா: 
தமிழ் சினிமாவில் கேடி, கல்லூரி, போன்ற படங்கள் மூலம் அனைவருக்கும் தெரிந்த முகமாக மாறிய நடிகை தமன்னா (Actress Tamannaah). இவர், 2010 முதல் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்கிறார். முதன் முதலில் பாலிவுட் மூலம் சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுத்தாலும் இவருக்கு தமிழ் சினிமாதான் தகுந்த வாய்ப்புகளை அளித்தது. விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என கோலிவுட்டின் டாப் ஹீரோக்கள் மட்டுமின்றி, தெலுங்கிலும் தமன்னாவின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. இதனால் தமிழ், தெலுங்கு என இருபக்கமும் பிஸியாக நடித்த தமன்னா, இப்போது பான் இந்தியா ஹீரோயினாக கலக்கி வருகிறார். அதேசமயம் தமன்னா, தற்போது இந்தி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த ‘ஜெயிலர்’ படத்தில் நடிகை தமன்னா நடித்திருந்தார்.


இதில் பாகுபலி படத்தில் பிரபாஸுடன் டாப்லெஸ் காட்சியில் நடித்த தமன்னா, கடந்த சில ஆண்டுகளாக செம்ம கிளாமராக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆம் பாகத்தில் ரசிகர்களை கிறங்க வைத்திருந்தார். அதேபோல் ஜெயிலர் படத்திலும் இவர் ஆடிய ஐட்டம் டான்ஸ் பட்டு தொட்டி வரை கதிகலங்க வைத்தது.


மேலும் படிக்க | Bonda Mani passed away: நகைச்சுவை நடிகர் போண்டா காலமானார்... அதிர்ச்சியில் திரையுலகினர்


நடிகை தமன்னா திருமணம்:
இதற்கிடையில் சமீபகாலமாக பாலிவுட் ஹீரோ விஜய் வர்மாவை காதலித்து வரும் தமன்னா விரைவில் அவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது. 


நடிகை தமன்னா சம்பள விவரம்:
17 ஆண்டுகளாக திரையுலகில் பயணிக்கும் தமன்னா, தற்போது ஒரு படத்துக்கு சுமார் 4 கோடி ரூபாய் வரை சம்பளம் (Tamannaah Salary Detail) வாங்குவாதக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி இவர் ஐட்டம் டான்ஸ் ஆட சுமார் 1 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.


நடிகை தமன்னா சொத்து மதிப்பு விவரம்:
இந்நிலையில் தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையான தமன்னாவின் சொத்து மதிப்பு (Tamannaah Net Worth) பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி 15வது வயதில் சினிமாவில் அறிமுகமானவர் தமன்னா, தற்போது 120 கோடி ரூபாய்க்கு அதிபதியாக உள்ளார். அதுமட்டுமின்றி மும்பையில் 20 கோடி மதிப்புள்ள வீடும், ஹைதராபாத், சென்னையில் பல கோடிகளில் பிளாட்டும் வாங்கிப் போட்டுள்ளார். அதேபோல், BMW 320i, Mercedes-Benz GLE, Mitsubishi Pajero போன்ற விலையுயர்ந்த சொகுசு கார்களையும் சொந்தமாக வைத்துள்ளார். அந்த வகையில் ஒட்டுமொத்தமாக இவைகளின் மொத்த மதிப்பு 2.5 கோடி ரூபாய் எனத் தெரிகிறது. முக்கியமாக தமன்னா 2 கோடி ரூபாய் மதிப்புடைய வைர மோதிரம் ஒன்று வாங்கியுள்ளாராம், நடிகைகளிலேயே தமன்னா வைத்திருக்கும் வைர மோதிரம் தான் ரொம்பவே விலை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | BB 7 Tamil Eviction: பிக்பாஸ் வீட்டில் அதிர்ச்சி! டைட்டில் வின்னரையே எவிக்ட் செய்த மக்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ