`சாஹூ` படத்தில் இணைந்த தமிழ் நடிகர்
பாகுபலியை அடுத்து தொடர்ந்து 'சாஹூ' படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் பிரபாஸ். ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என 3 மொழிகளில் 'சாஹூ' உருவாகி வருகிறது. சுஜீத் இயக்கும் இப்படத்தை வம்சி மற்றும் பிரமோத் இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக மதி, கலை இயக்குனராக சாபு சிரில் மற்றும் இசையமைப்பாளராக சங்கர் - இசான் - லாய் இணை பணிபுரியவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். ஜாக்கி ஷராப், சங்கி பாண்டே, வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், தமிழில் அருண் விஜய் ‘'சாஹூ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதும் உறுதியாகி இருக்கிறது.