2023-ல் மண்ணுலகை விட்டு மறைந்த 10 கலைஞர்கள்! கண்கலங்க வைத்த நடிகர்களின் இறப்பு..
Tamil Actors Who Died in 2023: தமிழ் சினிமா இந்த ஆண்டு பல கலைஞர்களை இழந்தது. அப்படி, மக்களின் கண்களை கலங்க வைத்த பிரபலங்களின் இறப்பு குறித்து இங்கு பார்க்கலாம்.
கோலிவுட் சினிமாவோடு, பின்னிப்பிணைந்து வாழ்ந்த பல நல்ல கலைஞர்கள் இந்த ஆண்டு இன்னுயிர் நீத்தனர். ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்புவரை பல கலைஞர்கள் உயிரிழந்தனர். அவர்களின் அனைவரின் இழப்புக்களும் மக்களை கலங்க வைத்தது. அப்படி ரசிகர்களை கலங்க வைத்த கலைஞர்களின் மரணங்கள், இதோ.
1.மனோபாலா:
கிட்டத்தட்ட 42 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் முக்கிய நடிகராக இருந்தவர், மனோபாலா. இயக்குநர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முக திறமைகளை கொண்டவர், இவர். இத்தனை ஆண்டுகளில் 700 படங்களுக்கும் மேல் பணியாற்றுகிறார். உடல் நிலை மொத்தமாக சரியில்லாமல் போகும் வரை படங்களில் நடித்து வந்தார். இவரது கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 69வது வயதில் உயிரிழந்தார். இவரது இழப்பு, ரசிகர்களை கலங்க வைத்தது.
2.மயில்சாமி:
நல்ல மனம் படைத்த பலர், திரையுலகில் இருக்கின்றனர், அப்படி, தனது ஆயுள் முழுவதையும் பிறருக்கு உதவி செய்வதற்காகவும், சினிமாவிற்காகவும் அர்பணித்தவர் மயில்சாமி. இவர், கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு தனது 57வது வயதில் உயிரிழந்தார். இவரது மரணத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
3.வாணி ஜெயராம்:
இந்திய சினிமாவிற்கே பெருமை சேர்க்கும் வகையில் வாழ்ந்த கலைஞர்களுள் ஒருவர், வாணி ஜெயராம். இவர் உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு இவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி வீட்டில் இருந்த போது மயக்கம் போட்டு கீழே விழுந்து உயிரிழந்தார். வாணி ஜெயராம் 77வது வயதில் உயிர் நீத்த இவரது இழப்பும், தமிழ் சினிமாவிற்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.
4.சரத்பாபு:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கர்களுக்கு நண்பராகவும், எதிரியாகவும் நடித்து பிரபலமானவர், சரத்பாபு. இவர், உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி தனது 71வது வயதில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி மண்ணுலகை விட்டு மறைந்தார்.
மேலும் படிக்க | அசோக் செல்வன் to ரெடின் கிங்ஸ்லி-2023ல் திருமணம் செய்து கொண்ட கோலிவுட் தம்பதிகள்!
5.நெல்லை தங்கராஜ்:
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் ஹீரோவுக்கு தந்தையாக நடித்திருந்தவர், நெல்லை தங்கராஜ். இவர், தெருக்கூத்து கலைஞராக இருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
6.மாரிமுத்து:
கோலிவுட்டில் சில படங்களை இயக்கி, சில படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியவர், மாரிமுத்து. பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்திருக்கிறார். இவருக்கு பெரும் பெயரை தேடித்தந்தது, ‘எதிர்நீச்சல்’ சீரியல். இதில், ஆதி குனசேகரன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவர், கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி இந்த சீரியலுக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கும் வழியிலேயே உயிரிழந்தார். இவரது இந்த எதிர்பாராத மரணம், ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.
7.ராமதாஸ்:
கோலிவுட் சினிமாவின் இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் என பன்முக திறமையை கொண்டவர் இ.ராமதாஸ். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், இந்த ஆண்டின் மார்ச் மாதம் 23ஆம் தேதி உயிரிழந்தார்.
8.டி.பி.கஜேந்திரன்:
இவரை 2000ம்களில் வெளியான பல படங்களில் பார்த்திருப்போம். இயக்குநராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்த இவர், கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி உயிரிழந்தார்.
9.ஆர்.எஸ்.சிவாஜி:
கமல் ஹாசனின் பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தவர், ஆர்.எஸ்.சிவாஜி. ‘தெய்வமே நீங்க எங்கையோ போய்டீங்க..’ என்ற இவரது டைலாக் மிகவும் இன்றளவும் மீம் டெம்ப்ளேட்டாக உபயோகப்படுத்தப்படுகிறது. இவர், தனது 66வயதில் கடந்த செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.
10.கே.விஸ்வநாத்:
‘யாரடி நீ மோகினி’ படத்தில் நயன்தாராவின் தாத்தாவாக நடித்திருந்தவர் கே.விஸ்வநாத். இவர், இயக்குநராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தார். இவர், தனது 92ஆவது வயதில் கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி உயிரிழந்தார்.
மேலும் படிக்க | Best Actress 2023: த்ரிஷா to சமந்தா-2023ஆம் ஆண்டின் சிறந்த நடிகை யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ