தமிழ் திரையுலகில் பல திறமையான இயக்குனர்கள் உள்ளனர், பலரும் பலவிதமான பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளனர்.  பல இயக்குனர்களும் மற்றவர்களுக்காக தான் கதைகளை கூறி வருகின்றனர்.  அந்த வகையில் சில நடிகர்களும் திரைக்கதைகளை தயாரித்து வருகின்றனர், சில நடிகர்கள் அவர்கள் தயாரித்த கதைகளில் அவர்களே நடித்துள்ளனர்.  அவ்வாறு தங்கள் படத்திற்கு தானே கதை எழுதிய சில நடிகர்களை பற்றி இங்கே காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சினிமாவில் கமல் கணக்கு தப்பாக போகுமா?


தமிழ் சினிமாவின் உலக நாயகன் என்று போற்றப்படும் நடிகர் கமல்ஹாசனின் நடிப்பு திறமை குறித்து தெரியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை.  பல நடிகர்களின் படங்களுக்கு கமல் ஹாசன் கதை எழுதி கொடுத்துள்ளார், அதேபோல தனது படங்களுக்கும் இவர் கதை எழுதியுள்ளார்.  தேவர் மகன், உத்தம வில்லன், பஞ்சதந்திரம், குரு, அபூர்வ சகோதரர்கள், குருதி புனல், போன்ற வெற்றி படங்கள் பலவற்றிற்கு கமல்ஹாசன் கதை எழுதி, நடித்தும், இயக்கியும் இருக்கிறார், இவரை சிறந்த நடிகர் என்பது மட்டுமல்லாமல் சிறந்த எழுத்தாளர் என்றும் போற்றுகின்றனர்.  



அடுத்ததாக தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என போற்றப்படும் நடிகர் ரஜினிகாந்தும் சில படங்களுக்கு கதை எழுதியுள்ளார்.  வள்ளி மற்றும் பாபா போன்ற படங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த கதை எழுதியுள்ளார்.  ஆரம்பத்தில் சிறப்பு தோற்றங்களில் சில படங்களில் நடித்து வந்த இவர் தற்போது மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்துள்ளார்.  இவருக்கு இயக்குனராக வேண்டும் என்பது தான் ஆசை, இவரது ஆசையை தற்போது இவரது இரண்டு மகள்களும் செய்து வருகின்றனர்.



அடுத்ததாக இயக்குனரும், நடிகரும், இசையமைப்பாளருமான பாக்கியராஜ் சிறந்த திரைக்கதை எழுத்தாளரும் ஆவார்.  அவர் நடித்த படங்களான இது நம்ம ஆளு, ருத்ரா மற்றும் துணை முதல்வர் போன்ற படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.  தமிழ் சினிமாவின் மிக சிறந்த திரைக்கதை எழுத்தாளராக இவர் போற்றப்படுகிறார், அதுமட்டுமல்லாது இவர் பலருக்கும் ரோல் மாடலாக திகழ்ந்து வருகிறார்.  



அதனையடுத்து நடிகர் தனுஷ் பல்வகையான திறமை நிறைந்த நடிகராக கருதப்படுகிறார்.  இவர் இயக்கி,  நடித்த பா.பாண்டி படத்தில் தனுஷ் தான் கதை எழுதியிருந்தார், தற்போது செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடிக்கும் 'நானே வருவேன்' படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.



மேலும் பன்முக திறமை கொண்ட நடிகர் சிலம்பரசன் திரைக்கதை எழுதுவதிலும் வல்லவர் ஆவார்.  நன்கு வெற்றிபெற்ற 'மன்மதன்' திரைப்படத்திற்கு நடிகர் சிம்பு தான் திரைக்கதை எழுதி இருக்கிறார், இப்படத்தை ஏ.ஜே.முருகன் உதவியுடன் சிம்பு இயக்கினார்.  இந்த படம் வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்ததோடு நல்ல வெற்றியையும் பெற்றது.



மேலும் படிக்க | 'ஏகே61' படத்தில் இணையப்போகும் 'அசுரன்' பட பிரபலம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR