சினிமாவில் கமல் கணக்கு தப்பாக போகுமா?

விக்ரம் படத்திற்கான புரோமோஷன் ஒருபுறம் இருக்க, விற்பனையும் படுஜோராக முடிந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : May 6, 2022, 09:12 AM IST
  • விக்ரம் படத்தின் புரோமோஷனை துவங்கிய கமல்
  • படத்தின் வியாபாரம் குறித்த தகவல் லீக்காகியுள்ளது
  • ஒடிடி விற்பனையில் லாபத்தை எடுத்ததால் மகிழ்ச்சி
சினிமாவில் கமல் கணக்கு தப்பாக போகுமா? title=

சினிமாவின் ஆணிவேரையும் ஆய்ந்தவர் கமல் என திரைத்துறையில் இருப்பவர்கள் கூறுவார்கள். ஏனென்றால், நடிப்பிலும், படத்தை விற்பதிலும் கைதேர்ந்தவர் கமல். அவருடைய நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் ’விக்ரம்’. இந்தப் படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ராஜ்கமல்’ நிறுவனமே தயாரித்திருக்கிறது. ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீஸாகும் இந்தப் படத்தை, தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது. 

மேலும் படிக்க | ஆர்.கே. சுரேஷின் விசித்திரன் படம் எப்படி உள்ளது? விமர்சனம்!

இந்நிலையில், விக்ரம் படத்தின் வியாபாரம் குறித்த தகவல் இப்போது லீக்காகியுள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட் 100 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. இதில் தொடக்கம் முதலே கறாராக இருந்திருக்கிறார் கமல். ஏனென்றால், படத்தின் விற்பனை, விநியோகம் மற்றும் வசூலைக் கணக்கு வைத்து, இந்த தொகைக்குள் படம் எடுத்தால் நிச்சயம் லாபத்தை எட்டிவிடலாம் என்பது கமலின் கணக்காம். அதற்கேற்ப படத்தை எடுத்த கமல், எதிர்பார்த்தது போலவே லாபத்திற்கு விற்பனை செய்துள்ளார். படம் வெளியாகும் முன்பே தயாரிப்பு செலவுக்கான தொகையை எடுத்துவிட்டாராம்.

விக்ரம் படத்தின் ரிலீஸ் உரிமையை ஸ்டார் குழுமம், அதாவது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வாங்கியிருக்கிறதாம். 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் 125 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறதாம். இதன் மூலம் தயாரிப்பு செலவுக்கு மேல் ஓடிடி விற்பனையிலேயே கிடைத்துவிட்டதால், தியேட்டர் வசூல் மூலம் கிடைக்கும் பணம் லாப கணக்கில் மட்டும் சேருமாம். இதனால், ஒட்டுமொத்த விக்ரம் படக்குழுவும் மகிழ்ச்சியில் இருக்கிறது.

இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து பகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது விக்ரம் திரைப்படம். கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகிறது. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. 

மேலும் படிக்க | பாலிவுட் டிவி நிகழ்ச்சிக்காக வருத்தம் தெரிவித்த டிடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News