இந்திய திரையுலகில் 2021ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்கான தேசிய விருது இன்று அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக தமிழ் படங்கள் சில தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவை என்னென்ன படங்கள்? யார் யாருக்கு எந்தெந்த விருது கிடைக்க உள்ளது? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெய் பீம்: 


சூர்யா நடிப்பில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான படம் ‘ஜெய் பீம்’ இந்த படத்தை டிஜே ஞானவேல் இயக்கியிருந்தார். இதில், மணிகண்டன், லிஜோமல் ஜோசி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம், தமிழ் நாட்டில் குறிப்பிட்ட சாதியினரிடையே கடும் சர்ச்சையை கிளப்பியது. இருப்பினும் ஒட்டு மொத்த ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பினை பெற்றது. 


இந்த படத்தில் ராஜாக்கண்ணு கதாப்பத்திரத்தில் நடித்திருந்த மணிகண்டனிற்கும் செங்கேணி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த லெஜிமோல் ஜோசி ஆகியோருக்கு சிறந்த துணை நடிகர்களுக்கான விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ‘சூரரைப்போற்று’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | ‘கிங் ஆஃப் கோதா’ படம் எப்படியிருக்கு..? டிவிட்டர் விமர்சனம் இதோ..!


கர்ணன்:


மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்த படம், கர்ணன். மாரி செல்வராஜ், இந்த படத்தில் ஒரு கிராமமே சாதியை காரணமாக வைத்து ஒடுக்கப்படுவதை காட்சிப்படுத்தியிருப்பார். இந்த படத்தில் ரஜிஷா விஜயன், லக்‌ஷ்மி பிரியா, கௌரி கிஷன், லால், நட்டி (எ) நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருப்பர், 


கர்ணன் படம், அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பினை பெற்றது. இதையடுத்து, இந்த படத்திற்கும் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குநருக்கான விருது கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த விருது தனுஷிற்கு கிடைக்கலாம் என ரசிகர்கள் பேசிக்கொள்கின்றனர். 


சார்பட்டா பரம்பரை:


பா.ரஞ்சித் இயக்கத்தில் 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான படம், சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யா ஹீரோவாக நடித்திருப்பார், ரங்கன் வாத்தியார் கதாப்பாத்திரத்தில் பசுபதி கலக்கியிருப்பார். இவர்களை தவிர துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருப்பர். 


சார்பட்டா பரம்பரை படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுத்திருந்த இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பினை கொடுத்தனர். இந்த படமும் தேசிய விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தால் ஆர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த இயக்குநருக்கான விருது பா.ரஞ்சித்திற்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. 


பிற படங்கள்..


மேற்கூறிய படங்களை தவிர இன்னும் இரண்டு படங்கள் தேசிய விருதிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. சமுத்திரகனி இயக்கத்தில் 2021, அக்டோபர் மாதம் வெளியான ‘விநோதய சித்தம்’ படமும் இந்த தேசிய விருதுக்கான லிஸ்டில் உள்ளது. இதில் தம்பி ராமையா, யுவ லக்ஷமி, ஸ்ரீரஞ்சினி, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 


நடிகர் சிம்புவை வைத்து வெங்கட் பிரபு இயக்கியிருந்த படம், ‘மாநாடு’. இந்த படமும் தேசிய விருது லிஸ்டில் உள்ளது. இதில் சிறந்த விருதுக்காக நடிகர் சிம்பு தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ சந்திரசேகர், Y.G மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 


மேலும் படிக்க | ‘ஜெயிலர்’ படத்தில் துணை நடிகருக்கு கிப்ட் கொடுத்த ரஜினி..! யார் அந்த நடிகர் தெரியுமா..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ