மருதாணி செய்த மாயம்.. ரம்யா அதிர்ச்சி.. தீபா கேட்ட கேள்வி.. கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai Deepam Today (5.8.2024) Episode: இன்றைய கார்த்திகை தீபம் சீரியல் எபிசோட்டில் என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியை காணத் தவறாதீர்கள்.
Tamil Serial Karthigai Deepam Latest Episode: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யாவின் அப்பா அவர்களுக்கு மாப்பிள்ளை பார்க்க சொன்னதும் அதைக் கேட்டு ரம்யா அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க
அதாவது கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருக்க தீபாவுக்கு மருதாணி போடும் நிகழ்ச்சியை நடத்த முடிவெடுக்கின்றனர். அபிராமி கொஞ்சம் வித்தியாசமா செய்யலாம் கார்த்தியே தீபாவுக்கு மருதாணி போட்டு விடட்டும் என்று சொல்கிறாள். இதற்கு எல்லோரும் ஓகே சொல்கின்றனர்.
அதன் பிறகு கார்த்திக் தீபாவுக்கு மருதாணி போட தயாராக அருண் ஆபீஸ்ல எல்லாரையும் நீ வேலை வாங்கிட்டு இருந்த இப்போ உன் பொண்டாட்டிக்கு மருதாணி போடுற மாதிரி ஆயிடுச்சு உன் நிலைமை என்று கலாய்த்து சிரிக்க கார்த்திக் நான் தீபாவுக்கு மருதாணி போடுற மாதிரி நீங்க எல்லாரும் உங்க பொண்டாட்டிக்கு மருதாணி போடுங்க என்று மாட்டி விடுகிறான்.
இதையடுத்து அருண் ஐஸ்வர்யாவுக்கும் ஆனந்த் மீனாட்சிக்கும் அருணாச்சலம் அபிராமிக்கும் தர்மலிங்கம் ஜானகிக்கும் என ஒவ்வொருத்தரும் அவர்களது மனைவிக்கு மருதாணி போட்டு விடுகின்றனர்.
தீபா கார்த்தியிடம் எப்படியும் எனக்கு கை நல்லா செவக்கும்னு தெரியும் அப்போ நீங்க காதலை ஒத்துக்குவீங்களா என்று கேட்க ஒரு பார்வை பார்த்த கார்த்திக் பார்க்கலாம் என்று சாதாரணமாக பதில் சொல்கிறான்.
அதன் பிறகு மருதாணி போட்டு கொஞ்சம் நேரம் விட்டு கைகளை கழுவ தீபாவின் கை மட்டும் நன்றாக சிவந்து இருக்கிறது. பிறகு கார்த்திக்கிடம் வந்து இது குறித்து கேட்க அவன் போயிட்டு அண்ணி கிட்ட கேளுங்க என்று சொல்கிறான்.
பிறகு தீபா மீனாட்சியிடம் கேட்க அவள் உனக்கு போட்டது மட்டும் தான் ரியல் மருதாணி மத்தவங்களுக்கெல்லாம் வச்சது மருதாணி கிடையாது. நான்தான் மாத்தி வச்சேன் என்று சொல்கிறாள்.
அடுத்து வீட்டுக்கு தரகரை வரவைத்து மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்று பேசுகின்றனர். இதைக் கேட்டதும் ரம்யா அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க - தன்னை விட 27 வயது இளைய நாயகிக்கு ஜோடியாகும் விஜய்?! யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ