ஸ்ரீ ரெட்டி...., சமீபகாலமாக இந்த பெயர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக தமிழ், தெலுங்கு சினிமா துறையை சேர்ந்த பலரை தூங்கவிடாமல் செய்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலுங்கு திரையுலகில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்களின் பட்டியலை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி ஸ்ரீ ரெட்டி, தற்போது தமிழ் திரைதுறையை சார்ந்தவர்களின் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு அவர்களின் முகத்திரையை கிழித்து வருகிறார். 


தமிழ் லீக்ஸ் (#tamilleaks) என்ற ஹேஸ்டேக் மூலம் முன்னணி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் வரிசையில் நேற்று நடிகரும், நடன மாஸ்டரான ராகவா லாரன்ஸ் குறித்து பதிவிட்டுள்ளார். 


முதலில் ஏ.ஆர். முருகதாஸை குறித்து, உங்களுக்கு ஞாபகம் இருக்கா கிரீன் பார்க் ஹோட்டல்? அங்கு நமக்குள் நிறைய....) எனக்கு வாக்கு கொடுத்தீர்கள். உங்கள் வாக்கை நிறைவேற்றவில்லை. நீங்கள் நல்ல மனிதர் சார் என்றும் குறிப்பிட்டிருந்தார். பின்னர் நடிகர் ஸ்ரீகாந்த் பற்றி, பார்க் ஹோட்டலில் நடந்த சிசிஎல் பார்ட்டி நினைவிருக்கா? நான் மிகவும் நேசித்தேன் நீங்கள் சாப்பிட்ட…….) புரிந்து கொள்ளுங்கள். அன்று என்னுடன் நீங்கள் கிளப்பில் நடனமாடிய பொழுது படத்தில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறினீர்கள் என பதிவிட்டிருந்தார். நேற்று ராகவா லாரன்ஸ் பற்றி, அவரை கோல்கொண்டா ஹோட்டலில் சந்தித்தேன். அவர் என்னை அறைக்கு அழைத்துச் சென்றார். சிறிது நேரம் கழித்து அவர் என் வயிற்றை காட்டுமாறு சொன்னார். கண்ணாடி முன்பு நின்று கவர்ச்சியான அசைவுகளை செய்து காட்டுங்கள் என்று கூறினார். உடனடியாக, எனக்கு வாய்ப்பு தருவதாக கூறி.. என்னுடன் சவாரி செய்தார் என்று கூறியிருந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


இன்னும் யார்? யார்? முகத்திரையை கிழியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று ஸ்ரீ ரெட்டி தனது சமூக வலைதளத்தில், நடிகர் விஷால் என்னை மிரட்டுகிறார். அதனால் நான் அச்சம் அடைந்துள்ளேன். ஆனாலும் கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிடுவேன் என தெரிவித்துள்ளார்.


தமிழ் லீக்ஸ் (#tamilleaks) என்ற ஹேஸ்டேக் மூலம் இன்னும் யாரெல்லாம் சிக்க போகிறமோ? என்று பல தமிழ் திரைதுறையை சார்ந்தவர்கள் பயத்தில் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.