'ஸ்ரீலீக்ஸ்' சர்ச்சையில் சிக்கினார் இயக்குனர் 'முருகதாஸ்'!

தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி இயக்குனர் முருகதாஸ் அவர்கள் ஏமாற்றி விட்டதாக ஸ்ரீலீக்ஸ் புகழ் ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்!

Updated: Jul 11, 2018, 10:43 PM IST
'ஸ்ரீலீக்ஸ்' சர்ச்சையில் சிக்கினார் இயக்குனர் 'முருகதாஸ்'!

தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி இயக்குனர் முருகதாஸ் அவர்கள் ஏமாற்றி விட்டதாக ஸ்ரீலீக்ஸ் புகழ் ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்!

தெலுங்கு திரைப்பட உலகில் வாய்ப்பு தேடிவரும் புதுமுக நாயகிகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக புகார் கூறி நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இவர் தற்போது தனது முகப்புத்தகத்தில் இயக்குநர் முருகதாஸ் அவர்கள் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

தெலுங்கு திரைப்படவுலகில் நடிகைகளுக்கு பாலியல் கொடுமை இருப்பதாக தொடர் போராட்டங்களில் குதித்தவர் ஸ்ரீ ரெட்டி. ஸ்ரீ லீக்ஸ் என்னும் பெயரில் தன்னுடன் நெருக்கமாக இருந்த சில நடிகர்கள், இயக்குனர்கள் பெயர்களை குறிப்பிட்டு வந்த இவர் இதுதொடர்பான புகைப்படங்களையும் ஆதாரமாக வெளியிட்டு வந்தார். 

இதனையடுத்து தெலுங்கி திரையுலகில் நடிப்பதற்கு இவருக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த முடிவை எதிர்த்து இவர் நடிகர் சங்கம் முன் அரை நிர்வாண போராட்டம் நடத்தி நாடு முழுவதும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் தற்போது தமிழ் திரைப்பட இயக்குனர் A.R முருகதாஸ் அவர்கள் தனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக குறிப்பிட்டு தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.. "ஹாய் முருகதாஸ் ஜி, எப்படி இருக்கின்றீர்... கிரீன் பார்க் ஹோட்டல் நியாபகம் இருக்கின்றதா? எனக்கு ஒரு கதாப்பாத்திரம் அளிப்பதாக உருதி அளித்தீர்கள், ஆனால் இதுவரை ஒரு சிறிய வேடம் கூட தரவில்லை... நீங்களும் பெரிய மனிதர் தான்!" என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.