முருகதாஷை அடுத்து ஸ்ரீகாந்த்... தொடரும் ஸ்ரீ ரெட்டியின் தமிழ் லீக்ஸ்

தமிழ் திரைதுறை உலகில் புயலைக்கிளப்பும் நடிகை ஸ்ரீ ரெட்டி. அடுத்தடுத்து தமிழ் லீக்ஸ் மூலம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Jul 12, 2018, 05:33 PM IST
முருகதாஷை அடுத்து ஸ்ரீகாந்த்... தொடரும் ஸ்ரீ ரெட்டியின் தமிழ் லீக்ஸ்
Zee News Tamil

தெலுங்கு திரையுலகில் வாய்ப்பு கிடைக்க வேண்டுமெனில், நடிகைகள் தங்கள் கர்ப்பினை விலையாக கொடுக்க வேண்டியுள்ளது எனவும், என்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்களின் பட்டியலை வெளியிடுவேன் எனவும் ஸ்ரீ ரெட்டி கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். 

இந்த குற்றச்சாட்டிற்கு தெலுங்கு திரையுலகினர் மறுப்பு தெரிவித்ததோடு, அவர் நடிப்பதற்கான உரிமத்தினை தெலுங்கு திரையுலகம் ரத்து செய்தது. தெலுங்கு திரைப்பட துறையின் நடவடிக்கையை எதிர்த்து கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் தெலுங்கு திரைப்பட துறையை சேர்ந்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என பலரின் புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

கிளிக்: தன்னை தானே செருப்பால் அடித்துக் கொண்ட ஸ்ரீ ரெட்டி

இந்நிலையில், தற்போது தமிழ் திரைதுறையை சார்ந்தவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களின் முகத்திரையை கிழித்து வருகிறார். அதில் முதலில் சிக்கியவர் முக்கிய இயக்குனர்களின் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ். அவரைக்குறித்து ஹாய் தமிழ் இயக்குனர் முருகதாஸ் ஜி எப்படி இருக்கீங்க? உங்களுக்கு ஞாபகம் இருக்கா கிரீன் பார்க் ஹோட்டல்? நமக்கு வெளிகோண்டா ஸ்ரீனிவாஸ் மூலம் பழக்கம் ஆனது. நீங்கள் எனக்கு வாக்கு கொடுத்தீர்கள். அங்கு நிறைய.... ஆனால் இதுவரை உங்கள் வாக்கை நிறைவேற்றவில்லை. நீங்கள் நல்ல மனிதர் சார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள், இன்று நடிகர் ஸ்ரீகாந்த் பற்றி எழுதியுள்ளார். அதில், 5 ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள பார்க் ஹோட்டலில் நடந்த சிசிஎல் பார்ட்டி நினைவிருக்கா? நான் மிகவும் நேசித்தேன் நீங்கள் சாப்பிட்ட ……. புரிந்து கொள்ளுங்கள். அன்று என்னுடன் நீங்கள் கிளப்பில் நடனமாடிய பொழுது படத்தில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறினீர்கள். உங்களுக்கு நினைவிருக்கா...? என கூறியுள்ளார். மேலும் #tamilleaks என்ற ஹேஸ்டேக் போட்டுள்ளார். 

இந்த தமிழ் லீக்ஸ் ( #tamilleaks ) என்ற ஹேஸ்டேக் மூலம் இன்னும் யாரெல்லாம் சிக்க போகிறமோ? என்று பல தமிழ் திரைதுறையை சார்ந்தவர்கள் பயத்தில் உள்ளனர்.