`மெர்சல்` : தமிழ் ராக்கர்ஸ் அதிரடி அறிவிப்பு!
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இந்த படத்தில் சமந்தா, காஜல், நித்யா மேனன் என 3 நாயகிகள் நடித்துள்ளனர். மேலும் இப்படம் இன்னும் மூன்று நாட்களில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தை தேனாண்டாள் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளாது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். பல சிக்கல்களை தாண்டி தற்போது மெரசல் தீபாவளிக்கு வெளியாகிறது.
இந்நிலையில் வெளியாகும் புது படங்களுக்கு பெரிய சிக்கலாய் இருப்பது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம். இதற்கு முன்னர், மெர்சல் படம் வெளியாகும் நாளன்றே இணையத்தில் வெளியிடுவோம் என அதிர்ச்சியான அறிவிப்பை தெரிவித்தனர்.
ஆனால், தற்போது மெர்சல் படத்தை மூன்று நாட்களுக்கு இணையதளத்தில் வெளியிட மாட்டோம் என்ற அதிரடி முடிவை தமிழ் ராக்கர்ஸ் குழுவினர் எடுத்துள்ளனர். இதனை தங்களது டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளனர்.
இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.