சி.எஸ். அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் கடந்த 12 ஆம் ஆண்டு உலக முழுவதும் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுக்கொண்டு இருக்கும் திரைபடம் "தமிழ்படம் 2". 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிவா, ஐஸ்வர்யா மேனன், சதிஷ், டிஷா பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள தமிழ்ப்படம் 2 படத்தை சி.எஸ். அமுதன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு என். கண்ணன் இசையமைத்துள்ளார். 


தமிழ்நாட்டில் மட்டும் 400 திரையரங்குகளில் வெளியானது. முன்னணி நடிகர்களின் படத்தைப் போல் சிவாவின் இந்த படத்திற்கு பயங்கர எதிர்பார்ப்பு இருந்தது. முதல் முறையாக சிவாவின் படத்திற்கு முதல் காட்சி காலை 5 மணிக்கு ஆரம்பித்துள்ளது. இதுவரை சிவா நடிப்பில் வெளியான படங்களிலேயே இந்த படம் தான் அதிக வசூலித்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு இதன் முதல் பாகம் வெளியாகி அமோகமான வரவேற்ப்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது இந்த படத்தின் "எவடா உன்ன பெத்தா...." என்ற வீடியோ பாடல் படக்குழு வெளியிட்டு உள்ளது.