தமிழா தமிழா மேடையை மிரள வைத்த சிறுவன்! வைரலாகும் புதிய ப்ரமோ!
Tamizha Tamizha New Promo: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வாரம் “அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறியவர்கள் Vs அசைவ பிரியர்கள்” என்ற தலைப்பு விவாதிக்கப்படுகிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மதியம் 12 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான விவாத நிகழ்ச்சி தமிழா தமிழா. ஊடகவியலாளர் ஆவுடையப்பன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான டாப்பிக்கை கையில் எடுக்கும் தமிழா தமிழா டீம் இந்த வார அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறியவர்கள் Vs அசைவ பிரியர்கள் என இரண்டாக பிரிந்து விவாதம் செய்ய உள்ளனர்.
ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் அசைய பிரியர்கள் அசைவ உணவு குறித்து எச்சி ஊறும் அளவிற்கு பேச நிகழ்ச்சி மீதா எதிர்பார்ப்பு அதிகரித்தது, இந்த நிலையில் தற்போது இன்னொரு ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | எதிர்நீச்சல் தொடரில் நடிக்க மாரிமுத்து போட்ட 3 கண்டிஷன்..! என்னென்ன தெரியுமா..?
இந்த ப்ரோமோ வீடியோவில் அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறியது ஏன் என ஆவுடையப்பன் சிறப்பு விருந்தினராக வந்துள்ள லொள்ளு சபா ஜீவாவிடம் கேள்வி எழுப்ப அவர் எல்லாம் காருண்ய ஒழுக்கம் தான் என்று சொல்கிறார். அசைவத்தை நிறைய சாப்பிட்டாச்சு, அது உடம்புக்கு நல்லது இல்ல என்று சொல்ல அசைவ பிரியர் ஒருவர் அசைவம் சாப்பிடலானா எனர்ஜியே இருக்காது என்று சொல்ல பிரூஸ்லி அசைவம் சாப்பிடவே மாட்டாரு என்று பதிலடி கொடுக்கிறார்.
இதனை தொடர்ந்து சிறுவன் ஒருவன் முட்டைக்குள் முதலில் ஹார்ட் தான் உருவாகும் அது துடிச்சிட்டே இருக்கும் போது அதை எப்படி நம்முடைய தேவைக்காக நிறுத்தலாம் என்று கேட்டு மேடையை வியக்க வைக்கிறார், இந்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | மாரிமுத்துவின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? எதிர்நீச்சல் தொடர் நடிகர் விளக்கம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ