Ram Charan and Sukuar New Movie : புகழ் பெற்ற புஷ்பா படத்தின் இயக்குநர் சுகுமாரும், 'குளோபல் ஸ்டார்' ராம்சரணும் காவிய பாணியிலான சினிமா முயற்சியில் இணையவுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எஸ். எஸ். ராஜமௌலியின் 'ஆர் ஆர் ஆர்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சுகுமாருடன் ராம் சரண் இணைந்திருப்பது.. நடிகரின் திரையுலக பயணத்தில் புதிய மைல்கல்லை குறிக்க உள்ளது. 


'ஆர் ஆர் ஆர்' படத்தின் பிளாக் பஸ்டர் ஹிட்டிற்கு பிறகு ராம்சரண் உலகளாவிய நட்சத்திரமாக உயர்ந்தபோது.. இயக்குநர் சுகுமார் அவரது இயக்கத்தில் வெளியான 'புஷ்பா' படத்தின் வெற்றியால் பெரும் புகழை பெற்றார். 


மேலும் படிக்க | ‘காதல் கொண்டேன்’ படத்தின் 2வது ஹீரோ இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?


இவர்கள் இருவரும் இணையும் திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பெயரிடப்படாத இந்த திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் பிரம்மாண்டமாக வெளியிடுவதை இலக்காகக் கொண்டிருக்கிறது. 


'ரங்கஸ்தலம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு ராம்சரண் -சுகுமார் -மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் 'ராக்ஸ்டார்' டிஎஸ்பி கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. 


இந்தத் திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.  'குளோபல் ஸ்டார்' என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ராம்சரண்  மற்றும் சுகுமார் இணைந்திருப்பதால்.. ரசிகர்கள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பான் இந்திய சினிமாவாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ரசிகர்கள் இந்த கூட்டணியை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டுள்ளனர். 


மேலும் படிக்க| | குக் வித் கோமாளியில் கலந்து கொள்ள இருக்கும் ‘அந்த’ பிரபலம்! இவங்க வந்தா பிரச்சனையாச்சே..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ