‘காதல் கொண்டேன்’ படத்தின் 2வது ஹீரோ இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?

Kadhal Konden Actor Sudeep Sarangi Latest Photos Viral : தனுஷ் நடிப்பில் 2003ஆம் ஆண்டு வெளியான படம், காதல் கொண்டேன். இந்த படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்தவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Mar 25, 2024, 05:10 PM IST
  • காதல் கொண்டேன் படத்தில் நடித்தவர் சுதீப்
  • அப்படத்தில் 2வது ஹீரோவாக நடித்தவர்
  • இப்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
‘காதல் கொண்டேன்’ படத்தின் 2வது ஹீரோ இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா? title=

Kadhal Konden Actor Sudeep Sarangi Latest Photos Viral : தமிழ் திரையுலகை பொறுத்தவரை, துணை நடிகர்களாக வருபவர்களில் சிலர் வெகு விரைவில் உச்சத்திற்கு சென்று விடுகின்றனர், ஒரு சிலர் இருந்த இடம் தெரியாமல் காணாமல் பாேய் விடுகின்றனர். அப்படி, தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஒரு படத்தில், முக்கிய கதாப்பாத்திரமாக நடித்த ஒருவர் தற்போது ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போய் இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

காதல் கொண்டேன் திரைப்படம்..

செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் 2003ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம், காதல் கொண்டேன். இந்த படத்தில் தனுஷ் உடன் சோனியா அகர்வால், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருப்பர். இவர்களுடன் சேர்ந்து நடித்தவர்களுள் ஒருவர், சுதீப். காதல் கொண்டேன் திரைப்படம் செல்வராகவனுக்கு முதல் படமாக இருந்தாலும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தில், நடிகர் தனுஷ் மனநலம் பாதிக்கப்பட்ட சைக்காே-ஹீரோ என்றால் அவருடன் இணைந்து இன்னொரு ஹீரோவாக நடித்த சுதீப் அப்படியே அவருக்கு ஆபோசிட்டாக சாக்லேட் பாயாக இருந்தார். இந்த படத்தில் அவரது பெயர் ஆதி கேசவன். ஆரம்பத்தில் சோனியா அகர்வாலை முற்றிலுமாக வெறுக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த இவர், அடுத்து எந்த பெண்ணை வெறுத்தாரோ அந்த பெண் மீதே அளவு கடந்த காதல் கொள்ளும் வாலிபராக நடித்திருப்பார். ஒரு கட்டத்தில் சோனியா அகர்வாலும் இவரை காதல் செய்ய, இவர்களின் ரொமான்டிக் காட்சிகளும், பாடல்களும் இளசுகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டன. 

யார் இந்த சுதீப் சாரங்கி?

சுதீப்  சாரங்கிக்கு முதல் படமே, காதல் கொண்டேன் படம்தான். இவருக்கு தாய் மொழி தமிழ் இல்லை என்றாலும், தமிழ் ரசிகர்களை இவருக்கு முதல் படத்தில் நல்ல வரவேற்பினையே கொடுத்தனர். அப்படியே அவருக்கு அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. 2004ஆம் ஆண்டு என்னவோ பிடிச்சிருக்கு என்ற படத்திலும், 2005ஆம் ஆண்டு காதலே ஜெயம் என்ற படத்திலும் நடித்தார். இந்த இரு படங்களும் அவரது முதல் படம் போன்ற கதாப்பாத்திரம் கொண்டிருந்ததால் ரசிகர்களால் பெரிதாக இவரை வித்தியாசப்படுத்தி பார்க்க முடியவில்லை. இந்த நிலையில், அவர் அடுத்து நடித்த இரு படங்களும் படு தோல்வியடைந்தன. காதல் கொண்டேன் படத்தில் ஹீரோவாக நடித்த தனுஷ் சினிமாவில் எங்கோ சென்று விட, இவர் சில படங்களில் தொடர்ந்து துணை கதாப்பாத்திரங்களிலேயே நடித்து வந்தார். 

மேலும் படிக்க | மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ள டாப் 5 கிரைம் திரில்லர் படங்கள்!

சீரியல் நடிகர்..

படத்தோல்விகளுக்கு பிறகு, சுதீப் சில இந்தி டெலிவிஷன் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். சில வங்காள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் அதில் எவையுமே அவருக்கு முக்கிய கதாப்பாத்திரங்கள் வழங்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது. 

இப்படி ஒரு நிலையா..?

இந்த நிலையில்தான், நடிகர் சுதீப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதில் அவர், காக்கி சட்டை காக்கி பேண்ட் அணிந்து கொண்டு பார்ப்பதற்கு ஒரு அரசு அலுவலகத்தில் வேலை பார்க்கும் ப்யூன் போல இருந்தார். அதைப்பார்த்த ரசிகர்கள், அந்த ஹிட் படத்தில் நடித்தவருக்கா இந்த நிலைமை என உச் கொட்டினர். இதையடுத்துதான் அனைவருக்கும் விஷயம் என்ன என்பதே புரிந்தது. 

நடிகர் சுதீப், ஒரு விளம்பர படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது எடுத்துக்கொண்ட புகைப்படம்தான் அது. அந்த புகைப்படத்தில் அவர், இது ஒரு வங்கியின் விம்பர படம் என்பதை பெயருடன் குறிப்பிட்டிருந்தார். அந்த ஷூட்டிங்கில் தனக்கு நல்ல அனுபவம் கிடைத்ததாகவும் சுதீப் குறிப்பிட்டிருந்தார். 

மேலும் படிக்க | Indraja Shankar : புதிதாக திருமணம் ஆன இந்திரஜா சங்கருக்கு நடிகர் சூரி கொடுத்த அட்வைஸ்! என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News