அப்பாவின் டெரர் கண்களை டாட்டூ குத்திய மகன்!!
நடிகர் விஜயகாந்தின் டெரர் கண்களை தனது கையில் பச்சை குத்தியுள்ளார் மகன் சண்முகபாண்டியன்!!
நடிகர் விஜயகாந்தின் டெரர் கண்களை தனது கையில் பச்சை குத்தியுள்ளார் மகன் சண்முகபாண்டியன்!!
தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த். இவரது இளைய மகன் சண்முகபாண்டியன். இவர், `சகாப்தம்' படம் மூலம் கதாநாயகனாகத் தென்னிந்திய திரை உலகுக்கு அறிமுகமானார். இதன்பின், ஜல்லிக்கட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட`மதுரவீரன்' என்ற படத்தில் நடித்தார்.
இதை தொடர்ந்து, `தமிழன் என்று சொல்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. இதற்காக, லண்டன் சென்ற சண்முகபாண்டியன், அங்கு தன் தந்தையின் `கோவம் நிறைந்த கண்களை' தன் இடது கையில் பச்சை குத்திக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், லண்டன் சென்று திரும்பிய அவர், தன் கையில் வரைந்த டாட்டூ கண்களை தனது அப்பா விஜயகாந்த்திடம் காண்பித்து மகிழ்ந்துள்ளார். அந்த மகிழ்ச்சி தருணத்தில் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விஜயகாந்த் அவரது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார்.
மேலும், அவர் `தமிழன் என்று சொல்' படப்பிடிப்புக்காக லண்டன் சென்ற என் இளைய மகன் சண்முகபாண்டியன், இன்று சென்னை வந்தடைந்தார். தன் கையில் என் கண்களை பச்சைகுத்தியதைக் (tatoo) காட்டி மகிழ்ந்தார். அந்த மகிழ்ச்சியான தருணத்தில் எடுக்கப்பட்ட படங்கள்' என எழுதியும் பதிவிட்டுள்ளார்.