தல அஜித்தின் நாங்க வேற மாதிரி பாடல் சாதனை படைத்துள்ளது
ரசிகர்களின் ஏக்கத்தை போக்கும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வலிமை படத்தில் இடம்பெற்ற யுவன்சங்கர் ராஜா இசையில் நாங்க வேற மாதிரி பாடல் வெளியானது.
நடிகர் அஜித் (Ajith Kumar) தற்பொழுது வலிமை (Valimai) திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.படம் பாதி முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகளுக்காக படக்குழு வெளிநாடு செல்கிறது.வலிமை படத்தினை தீபாவளிக்கு வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய ஹெச்.வினோத் (H.Vinoth) வலிமை திரைப்படத்தினை இயக்கி வருகிறார்.போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இருவரும் இணைந்து படத்தினை தயாரிக்கின்றனர்.
ALSO READ | #Vallimai: நடிகர் அஜீத் நடிக்கும் வலிமை திரைப்படம் தீபாவளிக்கு ரீலீஸ்
இதற்கு முன்னரே இந்தியில் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சான் (Amitabh Bachchan) நடித்து மிகப் பெரிய வெற்றியடைந்த பிங்க் (Pink) திரைப்படத்தினை தமிழில் அஜித்திற்காக ஒரு சில காட்சிகளை மாஸாக மாற்றியமைத்து தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற தலைப்பில் படத்தை இயக்கினார்.
நேர்கொண்ட பார்வை திரைப்படமும் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடமும் ஒரு நற்பெயரை வாங்கி தந்தது.அதுவும் படத்தில் இடம் பெற்ற (No Means No) என்ற வசனம் மிகப் பெரிய அளவில் ரீச் ஆனது.இப்படம் வெற்றிக்குப் பின் இயக்குனர் ஹெச்.வினோத்தும், நடிகர் அஜித்தும் மீண்டும் இணைகிறார்கள் என்றவுடன் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு உண்டாயிற்று.
இதற்கிடையில் இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் இருந்து வந்தது.இதன் காரணமாக படத்திற்கான அப்டேட்டும் வரமால் இருந்தாதால் ரசிகர்கள் மிகுந்த ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருந்தனர்.
ரசிகர்களின் ஏக்கத்தை போக்கும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வலிமை படத்தில் இடம்பெற்ற யுவன்சங்கர் ராஜா இசையில் நாங்க வேற மாதிரி பாடல் வெளியானது. அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது.இந்நிலையில் தற்போது அந்த பாடல் யூடியூப்பில் (YouTube) 20மில்லியன் (20 million) பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.
ALSO READ | தமிழில் அர்ச்சனை குறித்து அன்றே கணித்த தல அஜீத்-ஐ கொண்டாடும் ரசிகர்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR