தமிழில் அர்ச்சனை குறித்து அன்றே கணித்த தல அஜீத்-ஐ கொண்டாடும் ரசிகர்கள்!

"தமிழில் பேசும் தமிழ் குல விளக்கு! வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு என்ற பாடல் வரியினை குறிப்பிட்டு" தமிழில் அர்ச்சனை குறித்து அன்றே கணித்துள்ளார் நம்ம தல அஜீத் என்று அவரது ரசிகர்களும், நெட்டிசன்களும் சமூக வலை தளங்களில் இந்தப் பாடலை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 18, 2021, 05:33 PM IST
  • தமிழில் அர்ச்சனை செய்யப்படும் கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை என பலகை வைக்கப்படும்.
  • தமிழில் பேசும் தமிழ் குல விளக்கு! வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு
  • தமிழில் அர்ச்சனை குறித்து அன்றே கணித்த நம்ம தல அஜீத்
தமிழில் அர்ச்சனை குறித்து அன்றே கணித்த தல அஜீத்-ஐ கொண்டாடும் ரசிகர்கள்! title=

"சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்வதற்கான விவரங்கள் குறித்த தகவல் பலகையினை கடந்த ஆகஸ்ட் 3 தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இதற்கிடையே ஆகஸ்ட் 1ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும்  முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில் தமிழகத்தில் (Tamil Nadu) உள்ள கோவில்களில், தமிழில் அர்ச்சனை தொடங்கப்படுவதாகவும் முதலாவதாக சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் புதன் அல்லது வியாழக்கிழமை முதல் தாய்மொழி மொழி தமிழில் அர்ச்சனை பெயர் பலகை வைக்கப்படும் என்றும் அதில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகரின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண் ஆகியவை வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர் சேகர்பாபு குறிப்பிட்டது போலவே சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் "தமிழில் அர்ச்சனை செய்யவிருக்கும் விவரம் குறித்த பலகையினை கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டார். அந்தப் பலகையில் அர்ச்சனை செய்யவுள்ள குருக்களின் பெயர்களும், அவர்களுடைய தொலைபேசி எண்களும் அதில் இடம்பெற்றிருந்தது.

ALSO READ | Gender Equality: சென்னை தேனுபுரீஸ்வரர் கோவிலில் பெண் ஓதுவார் சுஹஞ்சனா கோபிநாத் பொறுப்பேற்றார்

இது குறித்து அப்போது கூறிய அமைச்சர் சேகர்பாபு தமிழகத்தில் முதலில் தேர்வு செய்யப்பட்டுள்ள 47 திருக்கோயில்களில் "தமிழில் அர்ச்சனை செய்யப்படும் எனவும் கோயில்களில் "அன்னைத் தமிழில் அர்ச்சனை என பெயர் பலகை வைக்கப்படும் அதில் அர்ச்சகர்களுடைய பெயர், தொலைபேசி எண் போன்ற தகவல்கள் பக்தர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.

தமிழக அரசு (TN Government) தமிழில் அர்ச்சனை என்ற இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பட்ட மக்களிடமிருந்து பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் வந்த வண்ணம் உள்ளது.

"இதற்கிடையில் இந்த திட்டத்தினை நடிகர் அஜித் (Actor Ajith) நடித்த பாடல் ஒன்று குறிப்பிட்டு ரசிகர்களும், நெட்டிசன்களும் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். 
நடிகர் அஜீத நடித்து 2007இல் மிகப்பெரிய வெற்றியடைந்த படம் தான் பில்லா! அதில் இந்த படத்தில் இடம்பெற்ற சேவல் கொடி பறக்குதடா சேந்து இடி இடிக்குதடா என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடலில் இடையில் வரும் ஒரு வரியில் "தமிழில் பேசும் தமிழ் குல விளக்கு! வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு என்ற பாடல் வரியினை குறிப்பிட்டு" தமிழில் அர்ச்சனை குறித்து அன்றே கணித்துள்ளார் நம்ம தல அஜீத் என்று அவரது ரசிகர்களும், நெட்டிசன்களும் சமூக வலை தளங்களில் இந்தப் பாடலை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

ALSO READ | #Vallimai: நடிகர் அஜீத் நடிக்கும் வலிமை திரைப்படம் தீபாவளிக்கு ரீலீஸ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News