#Vallimai: நடிகர் அஜீத் நடிக்கும் வலிமை திரைப்படம் தீபாவளிக்கு ரீலீஸ்

"நடிகர் அஜீத் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் வலிமை திரைப்படம் இறுதிக்கட்ட பட்பிடிப்பை நெருங்கியுள்ளது.ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வலிமை திரைப்பபடம் வெளியாகும் நாளும் தற்போது கிடைத்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 16, 2021, 09:09 PM IST
#Vallimai: நடிகர் அஜீத் நடிக்கும் வலிமை திரைப்படம் தீபாவளிக்கு ரீலீஸ்  title=

"நடிகர் அஜீத் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் வலிமை திரைப்படம் இறுதிக்கட்ட பட்பிடிப்பை நெருங்கியுள்ளது.ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வலிமை திரைப்பபடம் வெளியாகும் நாளும் தற்போது கிடைத்துள்ளது.

கிட்டத்தட்ட சில நாட்களாக அல்லது சில வருடங்கள் வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம் "வலிமை படத்தின் அப்டேட் எப்போது  வரும் என்று அஜீத் ரசிகர்கள் கிரிக்கெட் ஸ்டேடியம் தொடங்கி கோவை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வரை வலிமை பட அப்டேட்டினை கேட்டு அதகளப்படுத்தினார்கள்.

அதற்கு பலனாகவே சில நாட்களுக்கு முன்பு வலிமை படத்தின்  யுவன் இசையில் நாங்க வேற மாறி பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது.

Also Read | தல அஜித்தின் வேற லெவல் வீடியோ; இணையதளத்தில் வைரல்

அதனை அஜீத் ரசிகர்களும் நாங்க வேற மாறி என்று கொண்டாடி மகிழ்ந்தனர். தற்போது இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது."வலிமை திரைப்படம் தீபாவளி அன்று ரீலீஸ் செய்யப்படும் என வெளியாகிவுள்ளது.

இந்த தீபாவளி நமக்கு தல தீபாவளி என்று அஜீத் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.  இப்படத்தை சதுரங்க வேட்டை , தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்குகிறார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இருவரும் வலிமை படத்தினை தயாரிக்கின்றனர்.இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்!

ALSO READ | வலிமை படத்தின் மற்றொரு போஸ்டர் வெளியாகிறது; படக்குழு கூறுவது என்ன

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News